பிக்பாஸில் சர்ச்சை கருத்து! நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி போலீஸில் புகார்
காரைக்குடி: நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற டைல்ஸ் குறித்து நடிகரும் போட்டியாளருமான தீபக் தவறான கருத்தை கூறியிருந்தாராம். அந்த கருத்தை ஒளிப்பரப்பியதால் தனியார் தொலைக்காட்சி, தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆத்தங்குடி டைல்ஸ் என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த கையால் செய்யப்பட்ட தரை ஓடுகள் என அழைக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமம்தான் ஆத்தங்குடி. இங்கு இரு புறமும் சிறியது முதல் பெரியது வரை டைல்ஸ் கடைகளாகவே காட்சியளிக்கும்.
உலக புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ்களை இங்குள்ள மக்கள் குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள். இயந்திரங்களின் உதவியின்றி முற்றிலும் கைகளால் செய்யப்படும் இந்த டைல்ஸ் , செட்டிநாடு அரண்மனைகளுக்கு அழகு சேர்க்கிறது. இவை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த டைல்ஸில் எண்ணற்ற வண்ணங்கள் , வடிவங்களில் வருகின்றன. உள்ளூர் மண்ணை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இவற்றை காரைக்குடி டைல்ஸ் என்றும் அழைக்கிறார்கள். செட்டிநாடு பகுதிகளில் இந்த டைல்ஸ்கள்தான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டைல்ஸில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவு என்பது முக்கியம். இல்லாவிட்டால் டைல்ஸ்களில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
டைல்ஸ் கலரை அடரத்தியாக கட்ட வெள்ளை சிமென்ட் 1, ஆக்ஸைடு 1, மணல் 3, கிரே சிமென்ட் 6 பங்கு போட்டு கலப்பார்களாம். அது போல் லைட் நிறமாக வர மணல் 1.5 பங்கும், கிரே சிமென்ட் 3 பங்கும், ஒயிட் சிமென்ட், ஆக்ஸைடு ஆகியவை மேற்கண்ட அளவே சேர்ப்பார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications