சென்னையில் ஒருசில ஏடிஎம்கள் மட்டுமே செயல்படுகின்றன.. ரூ.100 நோட்டுகள் மட்டுமே கிடைக்கும்
சென்னையில் ஒரு சில ஏடிஎம் மையங்கள் மட்டுமே இயங்கத் தொடங்கி இருக்கின்றன. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் ஏடிஎம் மையங்கள் முன்பு காத்துக்கிடக்கின்றனர்.
சென்னை: சென்னையில் உள்ள ஏடிஎம் மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி பெருமூச்சி விடத் தொடங்கியுள்ளனர். என்றாலும் எல்லா ஏடிஎம்களும் திறக்கப்படவில்லை. ஒருசில மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனால் திறந்திருக்கும் ஏடிஎம் மையங்கள் அல்லாமல் மூடி இருக்கும் ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுக்க காத்திருக்கின்றனர்.
இந்தியா முழுவதும 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் கையில் பணம் இருந்தும் யாராலும் செலவு செய்ய முடியாத சூழல் உருவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

இந்நிலையில், நேற்றில் இருந்து வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து, நேற்று வங்கிகளுக்கு மக்கள் சென்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி வந்தனர். 4000 ரூபாய் வரை மட்டுமே மாற்ற முடியும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், வங்கிகளுக்கு சென்று பணத்தை மாற்றம் செய்த போது 1000 ரூபாய் மட்டுமே மாற்றிக் கொடுக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் மக்கள் அன்றாட அவசர செலவுகளைக் கூட செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்றிலிருந்து ஏடிஎம்கள் மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதனால் காலை 7 மணியில் இருந்து மக்கள் ஏடிஎம் மையங்களின் வாசல்களில் காத்துக்கிடக்கின்றனர். ஆனால் பல இடங்களில் இன்னும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்படவில்லை.
எனினும், சென்னையில் இன்னும் பல இடங்களில் ஏடிஎம் மையங்கள் திறக்கப்படாமல் உள்ளன. பல மையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். ஒவ்வொரு மையமாக திறக்கப்பட்டு வருவதாகவும் மாலைக்குள் அனைத்து ஏடிஎம் மையங்களும் முழுவதுமாக செயல்படத் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications