மின்சாரம் இல்லை.. ஏ.டி.எம்.கள் கடும் பாதிப்பு.. சென்னை மக்கள் தவிப்பு !
சென்னையில் மின்சாரம் இல்லாததால் பல இடங்களில் ஏடிஎம்கள் மூடிக்கிடக்கிறது. இதனால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
சென்னை: வர்தா புயல் பாதிப்பால் சென்னை நகரில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பல ஏடிஎம்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. ஏற்கனவே பணம் இன்றி பல ஏடிஎம்கள் செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது மின்சாரமின்றி செயல்பட்டுக் கொண்டிருந்து ஒன்றிரண்டு ஏடிஎம்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
வர்தா புயல் காரணமாக ஏ.டி.எம். சேவைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. சென்னையில் சுமார் 3200 ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான ஏ.டி.எம்கள் இயங்கவில்லை என்பதால் பணம் எடுக்க முடியாமல் சென்னை வாசிகள் தவித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாததாலும், நெட்வொர்க் பிரச்சினையாலும் ஏடிஎம்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மின்னனு பணப்பரிமாற்றத்தை அரசு ஊக்குவிப்பதாக கூறினாலும், வர்தா புயலுக்குப் பின்பு பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சில்லறை தட்டுப்பாட்டை மெல்ல மெல்ல சமாளித்து வந்த மக்களுக்கு வர்தா புயல் மீண்டும் ஒரு பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் மூடிக்கிடக்கும் ஏடிஎம்களை எதிர்நோக்கும் சூழல் உருவாகியுள்ளது.
வர்தா புயல் ஏற்படுத்தி சென்ற சோகத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், பணம் இல்லாமல் அத்யாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கையில் இருந்த பணத்தை எல்லாம் வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டு தற்போது ஏ.டி.எம்.களை நம்பிள்ள நடுத்தர சென்னை வாசிகளுக்கு ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளது மேலும் ஒரு துன்பமாக அமைந்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications