பெரியார் சிலையை சிதைப்பதால் அவரின் சித்தாந்தத்தை உடைத்து விடமுடியாது: தா.பாண்டியன்
பெரியார் சிலையை சிதைப்பதால் அவரின் சித்தாந்தத்தை உடைத்து விடமுடியாது என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடலூர்: பெரியார் சிலையை சிதைப்பதால் அவரின் சித்தாந்தத்தை உடைத்து விடமுடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பாக 24வது மாநிலமாநாட்டு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு மற்றும் தா.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நல்லக்கண்ணு பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளையும், திராவிர இயக்கங்களையும் ஒழிக்க சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். அதனை முறியடித்து மதச்சார்பற்ற ஆட்சியை இந்த நாடு முழுவதும் நிறுவ வேண்டியுள்ளது. அதற்கு முதற்கட்டமாக அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிகளை கம்யூனிஸ்ட்கள் தற்போது செய்ய வேண்டியுள்ளது என்றார்.
மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே அதனைப் பாதுகாத்து தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளது என்று நல்லக்கண்ணு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேசுகையில், தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட பெரியாரின் சிலை தமிழகத்திலேயே உடைக்கப்படுகிறது. சிலைகளை உடைத்தால் சித்தாந்தத்தை உடைத்துவிடலாம் என்று நினைப்பது சரியானது அல்ல என்று குறிப்பிட்டார்.
மேலும், ராமராஜ்ய ரதயாத்திரை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே ராமர் கோவில் என்று சொல்லி, சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தை தூண்டுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.
கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி, வருகிற 30ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கத் தவறும் மத்திய மாநில அரசுகளை அகற்றும் போராட்டத்திற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications