முற்றும் மோதல்... கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு குருமூர்த்தி பதிலடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குருமூர்த்திக்குதான் ஆண்மையில்லை- ஜெயக்குமார்- வீடியோ

  சென்னை: தனது டிவிட்டுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

  தினகரனின் ஆதரவாளர்களை 6 மாதத்துக்குப் பிறகு நீக்கியது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆண்மையற்றவர்கள் என அவர் பதிவிட்டிருந்தார்.

  இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரும் ஆடிட்டர் குருமூர்த்தியின் டிவிட்டுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆண்மையில்லாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

  ஜெயக்குமார் கண்டனம்

  ஜெயக்குமார் கண்டனம்

  அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருவதாக அவர் கூறியிருந்தார். ஆடிட்டர் குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா என கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார் எதற்கும் எல்லை உண்டு என்றும் டிடிவி ஆதரவாளர்கள் அனைவரும் தங்கள் எல்லையை உணர்ந்து பேசவேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

  குருமூர்த்தி பதில்

  குருமூர்த்தி பதில்


  இந்நிலையில் கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு குருமூர்த்தி டிவிட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.
  ஈபிஎஸ் - ஓபிஎஸ் அரசுக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன் என்ற தவறான எண்ணத்தை நீக்கியதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து சொல்வேன்..

  அவர்களை அரசாக நினைத்து நான் எப்போதும் ஆலோசனை வழங்கியதில்லை என அவர் கூறியுள்ளார். ஒரு எழுத்தாளராக கட்சிகள் குறித்து எனது கருத்துக்களை, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

  புதிதாக சொல்லவில்லை..

  மற்றொரு டிவிட்டில் துக்ளக் இதழில் கேள்வி பதில் பக்கத்தில் எடப்பாடி அரசு குறித்து இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுக தலைமை பலவீனமானது என நான் புதிதாக சொல்லவில்லை என குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  மன்னார்குடி ஆதரவாளர்கள்..

  மன்னார்குடி ஆதரவாளர்களுக்கு எதிராக அதிமுக தலைமை தவணை முறையில் நடவடிக்கை எடுத்தது என்றும் ஆர்.கே.நகர் தேர்தலை மன்னார்குடி ஆதரவாளர்கள் விலைக்கு வாங்கிய போதும், காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்களை பிடிக்காமல் பதிலுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியை தொடங்கியது என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Auditor Gurumoorthy has responded to Minister Jayakumar. Auditor Gurumoorthy says, "I have been expressing similar views in the Thuglak magazine in Q&A column, continuously, about the Edappadi government. There is nothing new I have said now about how weak the ADMK leadership is". He also thanked Minister Jayakumar for dispelling the wrong impression the Edappadi OPS govt is running on his advice.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற