ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம்: சேலத்தில் போலிஸ் குவிப்பு
சேலம்: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதால், மாவட்டம் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. சேலத்தில் ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் மிகப்பெரிய உருவப்படம் வைக்கப்பட்டு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆடிட்டர் ரமேஷின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்த பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் அப்சரா இறக்கம் பகுதியில் உள்ள யானை மண்டபத்தில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணியளவில் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் உள்ள சந்திர மஹால் திருமண மண்டபத்தில் ஆடிட்டர் ரமேஷின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.
இதில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் உள்ளிட்ட ஹிந்து இயக்கங்களின் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
சென்னையில் முக்கிய சாலைகளில் ஆடிட்டர் ரமேசின் உருவப்படத்தில் மாலை அணிவித்து நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications