ஆடி அமாவாசை,18ம் பெருக்கு, குருபெயர்ச்சி - ஆகஸ்ட் 2ம் தேதி ஒரே நாளில் 3 முக்கிய விசேஷங்கள்
சென்னை: நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முன்று முக்கிய சிறப்பு விசேஷங்கள் கொண்ட நாளாக அமைந்துள்ளது. ஆடி அமாவாசை, ஆடி18ம் பெருக்கு, குருபெயர்ச்சி என இந்த வருடம் ஆகஸ்ட் 2ம் தேதியன்று முக்கிய 3 இந்துப் பண்டிகை விசேஷங்களும் சேர்ந்தாற் போல வருகிறது.
ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசேஷத்திலும் விசேஷமாகும். இந்த நாளில் காவிரி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சிறப்பு பூஜைகள் செய்து நீராடுவார்கள்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிக்கு ஏற்ப இந்த நன்நாளில் கிராமங்களில் பெரும்பாலோனோர் தங்களது வீடுகள் முன்பு உள்ள காலி இடங்களில் விதைபோட்டு வீட்டு தோட்டம் போடுவார்கள். மேலும் விவசாயத்திற்கு உகந்த நாளாகவும் போற்றப்படுகிறது.

இதே நாளில் சித்திரை திருவிழாவிற்கு வந்த கள்ளழகருக்கு தீர்த்த உற்சவம் நடைபெறுவதும் தனி சிறப்பு. இதோடு சாமியாடிகள் மற்றும் பக்தர்கள் அழகர்கோவிலில் நூபுரகங்கையில் தீர்த்தமாடி வீடுகளுக்கு புனித தீர்த்தம் எடுத்து செல்வார்கள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருவது இயல்பு. அதேசமயம் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசையை சிறப்பாக போற்றுகிறார்கள்.
இந்த நாளில் சிவலாயங்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆடி அமாவாசை நாளில் சதுரகிரிமலை, ராமேசுவரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், அழகர் கோவில் நூபுரகங்கையில் பக்தர்கள் புனித நீராடி மறைந்த தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடுவார்கள்.
ஆண்டிற்கு ஓருமுறை குருபெயர்ச்சி நடக்கிறது. இந்த நல்ல நாளில் குரு பகவான் பார்வை கிடைத்தால் கோடி நன்மை கிடைக்கும் ஆகவே நம்மில் பலர் தங்களது ராசிக்கு குருபகவான் ஆதிக்கம் வருமா? என்று எதிர்பார்ப்பார்கள்.
குருபெயர்ச்சி நாளில் குருபகவான் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சிலர் ராசிக்கு ஏற்றவாறு பரிகாரம் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். ஆகவே குரு பெயர்ச்சி எப்ப வரும்? என்று நம்மில் பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி அமாவாசை, பதினெட்டாம் பெருக்கு, குருபெயர்ச்சி ஆகிய விசேஷங்களும் ஓரே நாளில் வருகின்ற ஆகஸ்டு மாதம் 2ம்தேதி வருகிறது.
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை அன்று இந்த மூன்று விசேஷங்களும் வருகிறது. எனவே ஆகஸ்டு மாதம் 2ம்தேதி அன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என்பது சந்தேகமில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications