Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடிப்பது என் பெர்சனல்.. அதை எப்படி தமிழிசை வெளியில் சொல்லலாம்.. ஆட்டோ டிரைவர் கோபம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    'ஆட்டோ டிரைவர் கதிருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக அவர் சொன்னார்'-தமிழிசை

    சென்னை: எனக்குக் குடிப்பழக்கம் உள்ளது என்பது எனது தனிப்பட்ட விவகாரம். அதை பொது இடத்தில் பகிரங்கப்படுத்திய டாக்டர் தமிழிசையின் செயல் வருத்தம் தருகிறது என்று ஆட்டோ டிரைவர் கதிர் கூறியுள்ளார்.

    Auto driver kathir upset over Tamilisais revelation about his drinking habit

    சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கதிர், பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்க முயன்றார். அவரை அங்கிருந்த பாஜகவினர் தாக்கி வெளியேற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய அளவில் இந்த விவகாரம் வெடித்ததால் வேறு வழியில்லாமல் கதிர் வீட்டுக்கு தனது கட்சியினர் புடை சூழ சென்றார் தமிழிசை.

    அங்கு கதிரையும், அவரது குடும்பத்தினரையும் பார்த்து சிரிக்க சிரிக்கப் பேசினார். இனிப்பையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது யாரும் கதிரை தாக்கவில்லை என்று அதிரடியாக பேட்டியும் அளித்தார். பேட்டியின்போது கதிருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக அவர் சொன்னார். அதை தவிர்க்க டானிக் வழங்குவதாக நான் கூறினேன் என்று கூறி விட்டுச் சென்றார்.

    தனக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தமிழிசை கூறியதால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளார் கதிர். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழிசை என்னைப் பார்க்க வந்தபோது, நான் கேள்வி கேட்கத்தான் முயன்றேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்று விளக்கினேன். என்னை யார் தாக்கியது என்பது எனக்கு சரியாக நினைவில்லை. போலீஸார் வந்து என்னைக் கூட்டிச் சென்று விட்டனர்.

    எனக்குக் குடிப்பழக்கம் என்பது தனிப்பட்ட விவகாரம். இதை பொது இடத்தில் பகிரங்கமாக அவர் கூறியது அதிர்ச்சி தருகிறது, அது தவறு. இதை பிரச்சினையாக்க விரும்பவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் போதும். மத்திய அரசு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று தமிழிசை விளக்கினார் என்று கூறியுள்ளார் கதிர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+