நெல்லை ஏர்வாடியில் டிரைவர் படுகொலை- பதற்றம்! பாஜக பிரமுகரை கொல்ல முயன்ற சம்பவத்துக்கு பழிவாங்கல்?
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி இன்று ஏர்வாடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதற்றத்தைத் தணிக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏர்வாடி காட்டுப்பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திங்கட்கிழமை இரவு தலை, கை, கால்களில் பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இது குறித்து ஏர்வாடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சண்முகம் (நாங்குநேரி), பாலாஜி (வள்ளியூர்) ஆகியோர் தலைமையில் ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவரின் பெயர் காஜாமைதீன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர் ஏர்வாடி 3வது தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகனாவார். ஆட்டோ டிரைவரான காஜா மைதீனை வெட்டிக்கொன்றவர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் காஜாமைதீன் கடத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. நேற்று இரவு சுமார் 7 மணிக்கு வழக்கம் போல காஜாமைதீன் ஏர்வாடி ஆட்டோ நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காஜாமைதீனை சவாரிக்கு அழைத்துள்ளார். அவரும் அந்த பெண்ணை அழைத்து கொண்டு சென்றார். ஏர்வாடியை அடுத்துள்ள காட்டுபகுதி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த கும்பல் காஜாமைதீனின் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியது. பின்பு அவரை ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்து போட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் காஜாமைதீன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. வெட்டி கொலை செய்து தப்பி ஓடியது.
இதையடுத்து போலீசார் கொல்லப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முயன்றனர். அப்போது கொலையுண்ட காஜா மைதீனின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கொலையாளிகளை உடனே கைது செய்தால் மட்டுமே உடலை எடுத்து செல்ல அனுமதிப்போம் எனக்கூறி உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அவர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் உடலை எடுக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எஸ்.பி.விக்ரமன் கொலையாளிகளை உடனே கைது செய்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து காஜாமைதீனின் உறவினர்கள் சமாதானம் அடைந்ததால், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு களக்காடு அருகே உள்ள பொத்தையடியை சேர்ந்த பாஜக ஒன்றிய செயலாளரும், ஆட்டோ டிரைவருமான முத்துக்குமார் என்பவரை 4 பேர் சேர்ந்து சவாரிக்கு அழைத்து செல்வது போல நடித்து ஏர்வாடி- நாங்குநேரி சாலையில் உள்ள ஆலங்குளம் பகுதியில் வெட்டிகொல்ல முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை, மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பழிக்கு பழியாக மர்ம கும்பல் காஜாமைதீனை வெட்டி கொலை செய்ததா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலீஸ் குவிப்பு
இதற்கிடையே பொத்தையடி பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காஜாமைதீன் கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஏர்வாடியில் கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டன. இதனால் பஜார் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஏர்வாடியில் தொடர்ந்து 2வது நாளாக பதற்றம் நிலவி வருவதால் 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நகர் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தனிப்படை அமைப்பு
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட காஜாமைதீனின் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்ட வண்ணம் இருப்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகள் குறித்து துப்பு துலக்கவும், கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை கொலையாளிகளை பிடிக்க நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு சென்று உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் தொடர்கொலைகள் சற்றே குறைந்திருந்த நிலையில் மீண்டும் படுகொலை சம்பவங்கள் அரங்கேறிவருவது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications