புளியரை அருகே பயங்கர விபத்து- ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பேர் பரிதாப பலி
புளியரை: செங்கோட்டை அருகே புளியரையில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடி, லாலாகுடியிருப்பை சேர்ந்த 6 பேர் இன்று காலை 9.30 மணியளவில் புளியரையில் உள்ள தெட்சணாமூர்த்தி கோவிலுக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை கற்குடியை சேர்ந்த டிரைவர் கருப்பசாமி ஓட்டினார்.
அந்த ஆட்டோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முருகன்(38), அடிவெட்டி (60), கணகு (42), கருப்புசாமி (35) உள்ளிட்ட ஆறு பேர் வந்துள்ளனர்.

புதூர் என்ற இடத்தின் அருகே ஆட்டோ சென்றபோது எதிரே கேரளாவில் இருந்து வந்த லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆட்டோ டிரைவர் கருப்பசாமி, முருகன், மற்றும் 2 பெண்கள், ஒரு ஆண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

பலியானவர்கள் உடலை செங்கோட்டையில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications