காலை கல்லூரி; மாலை கட்டிட வேலை! வறுமையை வென்ற ஜல்லிக்கட்டு வீரர் கார்த்திக்
அவனியாபுரம்: காலையில் கல்லூரி மாலையில் கொத்தனார் வேலை என விடாப்பிடியாக நின்று வாழ்க்கையில் வென்று காட்டி உள்ளார் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர் கார்த்திக்.
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்று பெருமை பேசுகிறோம். ஆனால், அந்த விளையாட்டில் உயிரைப் பணயம் வைத்து வெற்றி பெரும் வீரருக்கு கார் பரிசளித்து விட்டு, அடுத்த நொடியே அவரைப் பற்றி மறந்துவிடுகிறோம்.

அதை வீர விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதில் வெல்லும் வீரருக்கு அரசு வேலையை அளித்து தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என்கிறார்கள் ஜல்லிக்கட்டு பிரியர்கள்.
ஆனால், இன்னொரு பக்கம் 2ஆம் பரிசு வென்றவருக்கு இந்த ஆண்டு வெறும் சைக்கிள் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். கடந்த முறை பைக் தந்தவர்கள் இந்த முறை சைக்கிள் தருவது நியாயமா? என்கிறார்கள் ஜல்லிக்கட்டு பூமியின் மண்ணின் மைந்தர்கள்.
இந்த முறை நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்றுள்ளார் அவனியாபுரம் கார்த்திக்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே 24 காளைகளை அடக்கி கார் பரிசாக வாங்கியவர்தான் இந்த அவனியாபுரம் கார்த்திக். அப்போது அவருக்கு வெறும் 20 வயது. அன்றைக்குக் கல்லூரி மாணவர் அவர்.
இந்தளவுக்கு கார்த்திக், மாடு பிடிப்பதில் வல்லவராக வலம் வருவதற்கு அவரது மாமா சண்முகக் குமார்தான் காரணம். இவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆக இருக்கிறார்.

"வீட்டில் நாங்கள் ஜல்லிக்கட்டு மாடு வளர்த்தோம். அதைப் பார்த்து இவனுக்கு ஆர்வம் வந்துவிட்டது. அதற்காக 3 ஆண்டுகள் கடும் பயிற்சி எடுத்திருக்கிறார். அதன்பின்னர் தான் கடந்த 4 ஆண்டுகள் முன் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு 24 காளைகளை அடக்கி இருக்கிறார்" என்கிறார்.
முதன்முறையாக 2019இல் கலந்துகொண்டு போது 9 காளைகளை அடக்கி சாதித்திருந்தார் இவர்.
இந்த ஆண்டு 17 காளைகளை அடக்கி மீண்டும் பட்டையைக் கிளப்பி கார் பரிசு பெற்றுள்ளார் கார்த்தி. இதன் மூலம் இவர் படைத்த சாதனையை அவரே சமன் செய்துள்ளார். கடந்த முறை பைக் வென்றவர் இந்த முறை காரை வென்றுள்ளார்.

"என் அண்ணன் பாப் சக்தி ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு மாடு பாய்ந்து எங்கள் டீமுக்காக உயிரை விட்டுவிட்டான். அவனது ஞாபகமாக முதல் பரிசை வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டுப் போராடி வென்றுள்ளேன். இந்த முறை 2வது பரிசு வாங்கியது எங்கள் அண்ணன் தான். முதல் 2 பரிசும் நாம தான் ஜெயித்திருக்கிறோம்" என்கிறார்
"இந்தக் காளைப் பிடிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஒரு மாதம் விரதம் இருப்பான். தினம் சாமி கும்பிடுவேன்" என்கிறார் கார்த்திக்.
அவரது வீட்டில் ஆண்களைத் தாண்டி பெண்களும் இந்த மாடு பிடி வீர விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்கள். கார்த்திக் போட்டிக்குப் போகும் முன் சித்தி, சின்னம்மா, அம்மா என்று அனைவரிடம் வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டே செல்வது வழக்கம்.
சாமிக்கு வேண்டிக் கொண்டு, காப்புக்கட்டி காசு போட்டு அவர்கள் வழி அனுப்பிவைக்கிறார்கள். ஏறக்குறைய மக்களுக்கு ஜல்லிக்கட்டும் மட்டுமே தெரிகிறது. ஆனால், அதற்குப் பின்னால் உள்ள தெய்வ பக்தியும் சடங்கு சம்பிரதாயமும் யாருக்கும் தெரிவதில்லை.
கார்த்திக் தாத்தா ஒரு மாடு பிடி வீரர். சித்தப்பா, அங்காளி, பங்காளி என அனைவரும் மாடு பிடி வீரர்கள்தான். 10 தலைமுறைகளாக அவனியாபுரத்தில் கார்த்தியின் குடும்பம் வாழ்ந்துவருகிறது. அந்தளவுக்கு ஊரில் இவரது குடும்பம் பிரபலம்.

கார்த்திக் தாயார் ப்ரியா, "அவன் எதற்குமே ஆசைப்பட மாட்டான். அவனுக்கு மாடு பிடிப்பதுதான் ஆசை. ஆகவே அனுப்பி வைத்தோம்" என்கிறார்
கார்த்திக் குடும்பம் பொருளாதாரத்தில் மிக மோசமாகவே உள்ளது. மூன்று நாள் கல்லூரிக்குச் செல்லும் கார்த்திக் மூன்று நாள் கொத்தனார் வேலைக்குச் செல்கிறார். அந்தளவுக்குப் பகுதிநேரமாக வேலை செய்துகொண்டே படித்து வந்துள்ளார். அவரது வீட்டு வருமைதான் அவரை இந்த மாடு பிடி வீர விளையாட்டிற்குள் தள்ளி உள்ளது.
வீட்டுக்கு இவர்தான் மூத்த பையன். ஆகவே அந்தப் பொறுப்பு.
"அம்மாவின் நகையை அடமானம் வைத்து மாடுபிடிப் போட்டிக்கு வெளியூர் செல்வான். ஒரு ஐந்நூறு ரூபாய்கூட அவன் குடும்பத்தில் பெரிய காசு. 500 ரூபாயுடன் சென்றால், 5 ஆயிரம் வென்று வரும் அளவுக்குத் திறமைக்காரன் கார்த்திக்" என்கிறார் அவரது மாமா சண்முகக்குமார்
ஏதோ அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மட்டும் கார்த்திக் பங்கேற்கவில்லை. வருடம் முழுக்க எந்த ஊரில் போட்டி நடந்தாலும் அங்கே போய் கலந்து கொண்டு வெற்றி வீரனாகத் திரும்புவார் கார்த்திக்.
திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் என அவர் கலந்துகொள்ளாத ஜல்லிக்கட்டுப் போட்டிகளே இல்லை எனும் அளவுக்கு ஆல் ரவுண்டர் ஆக வலம் வருகிறார்.
இவ்வளவு வீரம் உள்ள இந்த இளைஞருக்கு அரசு ஏதேனும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் கார்த்திக்கின் உறவினர்கள்.
"உடம்பு முழுக்க காயம்தான். காயம் பட்டாலும் பரவாயில்லை. நம்ம ஊருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பல ஊர் போட்டிகளில் நான் தொடர்ந்து முதல் பரிசு வாங்கி இருக்கிறேன்.
இதுவரை தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய 15 ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். அதில் 11 ஊர்களில் முதல் பரிசை வென்றுள்ளேன். மாடு பிடிக்கத் தைரியம் இருந்தால் போதும். வேறு ஒன்றும் தேவையில்லை" என்கிறார்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications