பேசாம மதுரைக்கு வந்து எங்க கூட இருங்கப்பா... கருணாநிதியிடம் உருகிய அழகிரி
கொஞ்ச நாளைக்கு மதுரையில வந்து இருங்கப்பா என்று தனது தந்தையிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தாராம் அழகிரி.
சென்னை: அழகிரி மீது கருணாநிதிக்கு பாசம் அதிகம். சில ஆண்டுகள் கட்சியை விட்டு விலகியிருந்தாலும் தந்தை என்ற முறையில் வந்து சந்தித்து செல்வார் அழகிரி.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தந்தையை பார்த்த அழகிரி, உருக்கமாக பேசினாராம். இதை உறவினர்களும் பார்த்து நெகிழ்ச்சியடைந்தனர்.
முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த கருணாநிதி, கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக வெளியில் செல்வதை தவிர்த்து வந்தார். மருத்துவமனை வாசம், ஓய்வு என்றிருந்த கருணாநிதி, சில வாரங்களாக வெளியில் வந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

கொள்ளுப்பேரனுக்கு கருணாநிதி ஆசி
இன்று தனது மகன் மு.க முத்துவின் பேரன் மனு ரஞ்சித் திருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த விழாவில் கருணாநிதி குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர். இதனால் கோபாலபுரமே களைகட்டியது.

உருகிய அழகிரி
அழகிரி தனது குடும்பத்தோடு கோபாலபுரம் வந்திருந்தார். நீண்ட நாட்கள் கழித்து தந்தையை பார்த்த உற்சாகத்தில் ஓடிப்போய் கையை பிடித்துக்கொண்டார். எப்படிப்பா இருக்கீங்க என்று கேட்க, அதற்கு நலம் என்பது போல தலையை உயர்த்தி சிரித்தார் கருணாநிதி.

மதுரைக்கு வாங்கப்பா
மதுரைக்கு வந்து ரொம்ப நாள் ஆயிருச்சே. கொஞ்சநாளைக்கு மதுரையில வந்து இருங்கப்பா என்று உருக்கமாக கூறினாராம் அழகிரி. அப்போது இருவருமே நெகிழ்ச்சியோடு பேசியதை உறவினர்கள் பார்த்தனர்.

மதுரைக்கு போய் வருஷமாச்சே
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது மே மாதம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் கருணாநிதி. அடுத்த சில மாதங்களில் உடல்நலம் குன்றவே, வெளியூர் செல்வதை தவிர்த்து விட்டார். அண்ணா அறிவாலயம் கூட செல்வதில்லை. தற்போது மதுரைக்கு வருமாறு அழைத்துள்ளார் அழகிரி. மகனின் அழைப்பை ஏற்று கோபாலபுரத்தை விட்டு மதுரைக்கு செல்வாரா கருணாநிதி பார்க்கலாம்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications