திமுக வேட்பாளர் பட்டியல்.. சஸ்பெண்ட் ஆன மு.க.அழகிரிக்கு சீட் இல்லை!
சென்னை: திமுக சார்பில் மீண்டும் மதுரையில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருக்கிறார் மு.க.அழகிரி.
திமுக தலைமையுடன் கூட்டணி தொடர்பாக மோதியதாலும், தேமுதிகவை பகிரங்கமாக விமர்சித்ததாலும், மு.க.ஸ்டாலின் மீது காட்டத்தைக் காட்டியதாலும் அவர் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தால் மு.க.அழகிரிக்கு திமுக சார்பில் மீண்டும் எம்.பியாகும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது. அழகிரிக்கு சீட் இல்லை

பட்டவர்த்தனமாக பேசும் அழகிரி
அழகிரி பட்டவர்த்தனமாக, மனதில் பட்டதை அப்படியே பேசி விடும் வழக்கம் கொண்டவர். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவர். இதுவே அவருக்கு எதிரியாகி விட்டது.

விஜயகாந்த் மீது பாய்ச்சல்
விஜயகாந்த்தை கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக கூட்டணிக்குக் கூட்டி வர முயன்றவர் அழகிரிதான். ஆனால் விஜயகாந்த் முறுக்கிக் கொண்டதால் விஜயகாந்த் மீது கோபத்தில் இருந்து வந்தார்.

தலைவரா இவர்..
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க திமுக முயன்றபோது அதை கடுமையாக எதிர்த்தார் அழகிரி. வெளிப்படையாகவே, விஜயகாந்த்தெல்லாம் ஒரு தலைவரா, அவர் கட்சியா நடத்துகிறார் என்றெல்லாம் விமர்சித்தார்.

மு.க.ஸ்டாலின் மீதும் பாய்ச்சல்
இதுபோக மு.க.ஸ்டாலின் மீதும் தொடர்ந்து அவர் விமர்சனங்களை வைத்து வந்தார். எல்லாம் சேர்ந்து அழகிரிக்கு பாதகமாக அமைந்து விட்டது.

சஸ்பெண்ட்
இந்த நிலையில்தான் அழகிரி ஆதரவாளர்களை முதலில் கட்டம் கட்டிய திமுக தலைமை கடைசியில் அவரையும் சஸ்பெண்ட் செய்து விட்டது.

மதுரை போச்சே
கடந்த லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றவர் அழகிரி. மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகனை எதிர்த்து கடுமையாக போராடி நல்ல வெற்றியைப் பெற்றவர் அழகிரி. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பை இழந்து விட்டார் அழகிரி.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications