கடும் எச்சரிக்கை எதிரொலி... கோபாலபுரத்தில் மு.க.அழகிரி - கருணாநிதியை சந்திக்க மறுப்பு!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. அழகிரி ஆதரவாளர்களால் மதுரை திமுக தற்போது பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அழகிரியின் பிறந்த நாள் வருகிற 30ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் போரில் இறங்கியுள்ளனர்.
அவர்கள் ஒட்டி வந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு நிலவிய சூழலில், தேமுதிகவை நான் ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை, விஜயகாந்த்தை தலைவராகவே ஏற்கவில்லை. தேமுதிகவை கூட்டணியில் திமுக சேர்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
மேலும் அழகிரி ஆதரவாளர்கள் தயாரித்த, ஒட்டிய போஸ்டர்களும் திமுக தலைமைக்கு எரிச்சலைக் கொடுத்தது. தேமுதிக கூட்டணிக்காக திமுக தீவிரமாக தயாராகி வரும் நிலையில் அழகிரியின் போக்கு திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்தது.
இதையடுத்து முதலில் மதுரை மாவட்ட திமுகவை அதிரடியாக கலைத்தார் கருணாநிதி. புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி அழகிரிக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்து, அவரை கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார்.
இந்தச் சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு நேற்று மு.க.அழகிரி சென்றார். ஆனால் கருணாநிதியை சந்திக்கவில்லை. அழகிரி தமது தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்துப் பேசினார்.
அப்போது வீட்டின் மாடியில் இருந்த கருணாநிதி மேலே வருமாறு அழைத்தும் அழகிரி செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் அழகிரியின் மனைவி காந்தி, மகள் வெண்ணிலா, அவரது கணவர் வெங்கடேஷ், மகன் துரை தயாநிதி ஆகியோர் மட்டுமே கருணாநிதியை சந்தித்து பேசியதாக தெரிகிறது.
மாலையில் மு.க.அழகிரியின் மற்றொரு மகளான அமெரிக்காவில் இருக்கும் அஞ்சு கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்து பேசினார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications