கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு- திமுகவில் மீண்டும் சேர்க்கப்படுகிறார்?
கருணாநிதியை அழகிரி இன்று சந்தித்து பேசினார். ஸ்டாலின் செயல் தலைவரான நிலையில் திமுகவில் மீண்டும் அழகிரி சேர்க்கப்படுவாரா என்பது கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் 30 ஆண்டுகாலம் வகித்து வந்த இளைஞரணி செயலர் பதவியை விட்டுக் கொடுத்தார். புதிய இளைஞரணி செயலராக முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் முக அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்படும் நிலையில் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ளப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.
இருந்தபோதும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும்; அதனடிப்படையில்தான் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியும் என்பது ஸ்டாலின் தரப்பு வாதமாக இருந்து வருகிறது. ஆனால் அழகிரி தரப்பில் இதுவரை அத்தகைய கடிதம் எதுவும் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருணாநிதியுடனான அழகிரியின் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications