ஓபிஎஸ்க்கு அம்மா.. அழகிரிக்கு அப்பா.. ஆதங்கத்தை கொட்டும் ஸ்பாட்டான மெரினா!
ஓபிஎஸ் போலவே அழகிரியும் தனது ஆதங்கத்தை மெரினா நினைவிடத்தில் கொட்டித் தீர்த்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஓபிஎஸ் போலவே அழகிரியும் தனது ஆதங்கத்தை மெரினா நினைவிடத்தில் கொட்டித் தீர்த்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்றார் ஓபிஎஸ்.
இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலா தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் தியானம்
பின்னர் கடந்த 2017 பிப்ரிவரி 8ஆம் தேதி இரவு திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், 40 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு தியானம் மேற்கொண்டார்.

சசி குடும்பம் டார்ச்சர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை கூறினார். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தன்னை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கட்டாயப்படுத்தியதாகவும் சசிகலா குடும்பத்தின் டார்ச்சரால்தான் தான் பதவி விலகியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

ஒதுக்கப்பட்ட சசி குடும்பம்
ஓபிஎஸ் தியானத்திற்கு பிறகு அளித்த இந்த பேட்டி தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூவத்தூர் கூத்துகள், எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது, எடப்பாடி தரப்பு சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தது, ஓபிஎஸ் துணை முதல்வரானது, கட்சியும் சின்னமும் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததெல்லாம் தனிக்கதை.

கருணாநிதி நினைவிடத்தில்..
இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தனது தந்தையின் நினைவிடத்தில் இன்று குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.

ஆதங்கத்தை கொட்டிய அழகிரி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது ஆதங்கத்தை தந்தையின் நினைவிடத்தில் வேண்டிக்கொண்டதாக கூறினார். உண்மையான விசுவாசிகள் தன்னுடன் இருப்பதாக கூறிய அவர் தான் தற்போது திமுகவில் இல்லை. அதனால் செயற்குழு குறித்து தான் பேசவில்லை என கூறி மறுத்துவிட்டார்.

ஓபிஎஸ்க்கு அம்மா, அழகிரிக்கு அப்பா
ஓபிஎஸ், அம்மா என்று பாசத்தோடு அழைக்கும் ஜெயலலிதா நினைவிடத்தில் தனது ஆதங்கத்தை கொட்டி ஒரு புரட்சியை நடத்தினார். அதேபோல் தற்போது அழகிரி தனது அப்பாவின் நினைவிடத்தில் ஆதங்கத்தை கொட்டியுள்ளார். இது என்ன மாதிரியான புயலை கிளப்பபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications