அருள்நிதியை வாழ்த்திய அழகிரி பெரியப்பா... நேருக்கு நேராய் பார்த்தும் சிரிக்காத ஸ்டாலின்
சென்னை: உறவுகளுக்குள் என்னதான் கோபம் என்றாலும் திருமணம் போன்ற விழாக்களில் ஒருவருக்கொருவர் பங்கேற்கும் போது முகமலர்ச்சியோடு அவர்களை எதிர்கொண்டு வரவேற்பு கொடுப்பார்கள். ஆனால் நடிகரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி திருமண விழாவில் அண்ணன் தம்பிகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேராக சந்தித்தும் சிரித்து பேசிய காட்சியை காணமுடியவில்லை.
ஆனால் மு.க. அழகிரியை திருமணவிழவில் கண்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கையை பிடித்து நலம் விசாரித்த காட்சியைக் காணமுடிந்தது.

திக்குமுக்காடிய கலைஞர் அரங்கம்
அருள்நிதிக்கும்-கீர்த்தனாவுக்கும் இன்று காலை நடைபெற்ற திருமண விழாவை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னின்று நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்த பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும் இன்று காலை முதலே கலைஞர் அரங்கத்தில் கூடினர்.

அண்ணன் வர்றார்...
திருமணத்திற்கு வருகை தந்தவர்களை வரவேற்கும் பொறுப்பு ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டது. மணவிழாவிற்கு அண்ணன் அழகிரி வர அங்கு காத்திருந்த ஸ்டாலின் வரவேற்றார். ஆனால் முகத்தில் புன்னகை மாயமானது. ஆனால் அவருக்கு அருகில் இருந்த ஆர்.எஸ் பாரதி பொன்முடி, ஆகியோர் முகம் முழுக்க சிரிப்போடு அழகிரியை வரவேற்றனர்.

வாங்க வாங்க நலமா
திருமணத்திற்கு வந்திருந்த வி.சி தலைவர் திருமாவளவனும் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் அழகிரியின் கையை பிடித்து நலம் விசாரித்தனர்.

வாழ்த்திய பெரியப்பா
நேராக மணமேடைக்கு போன அழகிரி மணமக்களை வாழ்த்தினார். அவருடன் மனைவி காந்தி, மகன் துரைதயாநிதி, மருமகள் அனுஷா ஆகியோரும் வாழ்த்தினர்.

தலைவருக்கு பொன்னாடை
திருமணவிழாவிற்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் கருணாநிதிக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.

தம்பியின் கை பிடித்த அண்ணன்
இந்த பாசம் 2016 தேர்தல் வரைக்கும் தொடரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தம்பி வைகோவின் கையை அண்ணன் கருணாநிதி பிடிக்க முகம் முழுக்க சிரிப்போடு காட்சியளித்தார் வைகோ.

வாங்கம்மா நலமா?
திருமண விழாவில் சற்றே ரிலாக்ஸ் ஆக இருந்தபோது, தன்னை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையை நலம் விசாரித்தார் கருணாநிதி.

எவ்ளோ நாள் ஆச்சுப்பா
நீண்ட நாட்களுக்குப் பிறகு துரைமுருகனுடன் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வைகோ.

மீனம்மா மீனம்மா
திருமண விழாவில் பங்கேற்ற நடிகை மீனா... தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.

ஸ்டாலின் அன் கோ
எவ்வளவோ பார்த்துட்டோம் என்று மேடையில் நடந்த சம்பவங்களை தனது மகன் உதயநிதியோடு அமர்ந்து பார்த்து ரசித்தார் ஸ்டாலின்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications