அண்ணனை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டும்.. கையெழுத்து இயக்கம் தொடங்கும் அழகிரி உடன்பிறப்புகள்!
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளனர்.
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். நிச்சயம் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவோம் என எதிர்பார்த்திருந்தார் அழகிரி.

அதற்குள் திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை தேறி வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கருணாநிதி காலமானார்.
இதைத்தொடர்ந்து திமுக தலைவரானார் ஸ்டாலின். கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி குறித்து வாய் திறக்காமல் உள்ளார் ஸ்டாலின்.
இந்நிலையில் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளனர். அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அழகிரி ஆதரவாளர் மன்னன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அழகிரியையும், எங்களையும் உடனே திமுகவில் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக அழகிரி வீட்டிலிருந்து கையெழுத்து இயக்கம் தொடங்கி திமுக தலைமைக்கு அனுப்ப உள்ளோம், என்று அவர் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications