அண்ணனுக்காக வனவாசம் செல்வோம்: அழகிரி ஆதரவாளர்கள் ஆதங்கம்

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. வை கூண்டோடு கலைத்துவிட்டதாக தி.மு.க. பொதுச் செய லாளர் அன்பழகன் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். ஸ்டாலின் ஆதரவாளரான தளபதி தலைமையில் ஏழு பேர் கொண்ட பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே ஸ்டாலின் விசுவாசிகள்தான்.
கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையால் அழகிரி வட்டா ராம் அப்செட்டில் இருக்கிறது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆதரவாளர்கள் கேட்டதற்கு, ‘பொறுமையாக இருங்கள். 9-ம் தேதி மதுரை வந்ததும் பேசிக்கொள்ளலாம்'என்று மட்டும் சொல்லி இருக்கிறாராம் அழகிரி.
அழகிரிக்கு துணையாக
அழகிரி ஆதரவாளர்களின் தற்போதைய நிலைகுறித்து அழகிரி விசுவாசியும் கலைக்கப் பட்ட மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளருமான மிசா பாண்டியன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"இருபது வருடங்களுக்கு முன்பு ம.தி.மு.க. பிளவு ஏற்பட்டபோது தென் மாவட்ட தி.மு.க.வுக்கு எத்தகைய சோதனை வந்ததோ அதைப்போல இதுவும் எங்களுக்கு ஒரு சோதனை. அழகிரியுடன் இருப்பவர்கள் பதவி இல்லாவிட்டால் ஓடிவிடுவார்கள் என்ற சொல்லை பொய்யாக்கிக் காட்ட எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
ராமாயணம் உதாரணம்
பரதனை அரியணை ஏற்ற வேண்டும் என்பதற்காக ராமனை வனவாசம் அனுப்பினார்கள். ராமனோடு லெட்சுமணனையும் காட்டுக்குப் போகச் சொல்லவில்லை. ஆனால், அண்ணனுக்கு துணையாக தம்பி லெட்சுமணனும் காட்டுக்குப் போனான். அதுபோல அண்ணன் அழகிரிக்காக நாங்களும் வனவாசம் செல்லத் தயாராகி விட்டோம்" என்று சொன்னார்.
மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்ட அழகிரி விசுவாசிகள், "கீழ்மட்ட தொண்டனை நெருங்காமல் மேல்மட்டத் தலைவர்களையும் வந்தேறிகளையும் வைத்துக் கொண்டு கட்சி நடத்துகிறார் ஸ்டாலின்.
தென் மண்டல அமைப்பு
வைகோ தொடங்கி பரிதி வரை கட்சிக்காக உழைத்த பலர், கட்சியை விட்டுப் போனதற்கு யார் காரணம்? தலைவருக்கு பின்னால் தகுதியான நபரின் தலைமையில் கட்சி வழிநடத்தப்பட வேண்டும் என்பதுதான் அழகிரியின் கவலை.
தென் மண்டல தி.மு.க. செயலாளராக இருக்கும் அழகிரி, தென் மண்டல தி.மு.க. கூட்டத்தை கூட்டவேண்டும். அதேசமயம் அவர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications