பி.எட் படிப்புக்கான அனுமதி.. கல்வி நிறுவனங்களுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் பி.எட் கல்வி நிறுவனங்களின் அனுமதி விண்ணப்பம் மீது 4 வாரத்துக்குள் முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேலூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளை, கே.டி. கல்வி அறக்கட்டளை, மதுரையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள், பி.எட். கல்வி தொடங்குவதற்காக அனுமதி கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திடம் விண்ணப்பித்தன.

இந்த நிலையில் அந்த கல்வி அறக்கட்டளைகளுக்கு கல்விக் குழுமத்தின் தென் மண்டல இயக்குனர் ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தடையற்ற சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்காததால், ஏன் உங்கள் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீசினை எதிர்த்து 3 கல்வி அறக்கட்டளைகளும் ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தன. தடையற்ற சான்றிதழ் இல்லாமலேயே அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அவை கோரின.
இந்த வழக்கில் நீதிபதிகள், "கல்வி விதிகளின்படி விண்ணப்பத்தோடு தடையற்ற சான்றிதழ் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 3 கல்வி நிறுவனங்களும் நோட்டீசை பெற்றுக் கொண்டு அதற்கு பதில் சொல்லவில்லை. மாறாக, அந்த நடவடிக்கையை செல்லத் தகாததாக செய்வதற்காக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்த நோட்டீசுக்கு பதிலளிக்க கல்வி அறக்கட்டளைகளுக்கு 2 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது.
அதுபோல தடையற்ற சான்றிதழ் கேட்டு கல்வி அறக்கட்டளைகள் கொடுத்துள்ள விண்ணப்பங்களை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் இன்னும் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications