புரட்சி விதையின் முன்னோடி அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் – டூடுள் போட்டு கொண்டாடும் கூகுள்
சென்னை: இந்தியாவின் சமூக புரட்சியாளாரான அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை கூகுள் தன்னுடைய டுடூள் மூலமாக கொண்டாடி வருகின்றது.
சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் ஏப்ரல் 14 இதே நாளில் 1891 ஆம் ஆண்டு பிறந்தார்.
உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரான இவர், லண்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்:
விடுதலை அடைந்த பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சரானார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடியவர்.

சமூக நீதி புரட்சியாளர்:
பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதி புரட்சியாளராகவும் விளங்கியவர்.

திராவிட புத்தகத்தின் வித்து:
இவை அனைத்துக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசன வரைவுக் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். "திராவிட புத்தகம்" என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்த சமயத்தைத் தழுவச் செய்தவர்.

பாரத ரத்னா விருது:
இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான "பாரத ரத்னா" விருது 1990 இல் இவரது மறைவுக்குப் பின்னர் இவருக்கு வழங்கப்பட்டது.

கூகுள் கொண்டாடும் 125வது பிறந்தநாள்:
வரலாற்றின் பல சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளை அழகான ஓவியங்களாக மாற்றி தனது வலைதளத்தில் டூடுல் வைத்து வரும் கூகுள் இன்று அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாள் என்பதால் அம்பேத்கரின் உருவப்படத்தை டூடுலாக வைத்து அம்பேத்கரின் பெருமையை உலகிற்கு உணர்த்தியுள்ளது கூகுள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications