'பாகுபலி 2' இந்திய சினிமாவிற்கு பெருமை: ரஜினி புகழாரம்!
பாகுபலி 2 திரைப்படம் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்திருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாகுபலி 2 படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது. படம் ரிலீஸான அன்றே இந்தியாவில் ரூ. 121 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

பாகுபலி படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் எல்லாம் மிரண்டு போயுள்ளனர். இனிமேல் இப்படி ஒரு படத்தை வேறு யாராலும் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே என்கின்றனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டால் ரஜினிகாந்த் பாகுபலி 2 படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினி கூறியுள்ளதாவது: இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ள பாகுபலி இயக்குநர் ராஜமெளலி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications