மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை கருத்து.. எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது.. அண்ணாமலை கண்டனம்
பெரம்பலூர்: மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக எழுத்தாளரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். மணிப்பூர் கலவரம் குறித்த பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் இவர் கருத்து தெரிவித்திருந்ததாக தெரிகிறது.
இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் இவருடைய கருத்து இருந்ததால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் பத்ரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியதற்கு பத்ரி அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்ரியின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி ஷேசாத்திரியை தமிழக போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக போலீசாரின் பணியா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications