தூத்துக்குடியில் சிக்கிய யு.எஸ் கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனு டிஸ்மிஸ்
மதுரை: தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் உலா வந்த அமெரிக்காவின் தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டது.
இக்கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கியூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள், 5,680 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த கப்பலுக்கு சட்டவிரோதமாக டீசல் வழங்கிய தூத்துக்குடியை சேர்ந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதில், இங்கிலாந்து நாட்டவர் ஒருவர், இந்தியர்கள் 2 பேர் ஆகிய மூவரை கியூ பிரிவு போலீஸார் தங்கள் காவலில் எடுத்து 5 நாள்கள் விசாரித்தனர்.
இந்நிலையில் கப்பலில் கைது செய்யப்பட்ட 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் சார்பில் ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் பாளையங்கோட்டை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜாமீன் கேட்டு 35 பேரும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்களின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications