தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அக்.6-ந் தேதி அரசு விடுமுறை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 6-ந் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5-ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும். இதனால் தமிழக அரசு அன்றைய தினம் விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை காஜி விடுத்த வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோள் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை அக்டோபர் 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications