தீர்ப்பாய உத்தரவுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: தமிழக அரசு உத்தரவு
சென்னை: தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டதில் இருந்து, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை கடந்த ஆண்டு முடிந்தது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. இதற்காக தமிழகத்தின் முக்கியமான இடங்களில் தீர்ப்பாயம் மூலம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்பதை மீண்டும் தீர்ப்பாயம் உறுதி செய்து தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசும் புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொதுத் துறை முதன்மைச் செயலர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்தது. அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் அகண்ட தமிழகம், தமிழர்கள் வாழும் பகுதியில் தனி நாடு, இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை நோக்கியுள்ளன.
இதுதொடர்பாக கடந்த மே 5-ந் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பு கொண்ட 6 இலங்கைத் தமிழர்கள் ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனை கடற்கரைக்கு பாஸ்போர்ட் இல்லாமல், சட்டத்துக்குப் புறம்பாக வந்திறங்கினர். அவர்கள் மீது தனுஷ்கோடி போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிவகங்கை மாவட்டம் மானகிரியில் உள்ள வீடு முன்பு தமிழ்நாடு விடுதலைப் படை என்ற புலிகள் ஆதரவு அமைப்பினர் கடந்த பிப்ரவரி 11-ந் தேதி பிரிவினை வாசக நோட்டீஸ்களை எறிந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 4-ம் தேதி, ப.சிதம்பரத்தின் பண்ணை வீட்டில் பைப் குண்டு வைத்து வெடிக்க வைத்தனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காருக்கு அடியில் பைப் குண்டு வைத்தனர். மதுரை உத்தங்குடியில் தமிழ்நாடு விடுதலைப் படையினர் இரும்பு பைப் குண்டு, பெட்ரோல் குண்டு வைத்துவிட்டுச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் செங்கல்பட்டு, திருச்சி அகதிகள் முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
பிரபாகரனின் மகன்கள் சார்லஸ் ஆன்டனி, பாலச்சந்திரன் பெயர் பொறித்த கல்வெட்டும் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இன்னும் தங்கள் நடவடிக்கைகளை தொடர்வது இதன்மூலம் தெரிகிறது.
இதனால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால், அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications