பணம் சேமிப்பது எப்படி? பள்ளி மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு துவக்கி விளக்கம்
மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
காரைக்குடி: மாணவர்களுக்கிடையே பண சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் யூகோ வங்கியின் சார்பாக புதிய வங்கிக் கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமையாசிரியர்திரு. ஆ. பீட்டர் ராஜா அவர்கள் தலைமையேற்றார். யூகோவங்கியின் சீனியர் மேலாளர் திரு. C. சிதம்பரம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
யூகோ வங்கியின்சிறப்பு உதவியாளர் திருமதி. S. மல்லிகா தேவி அவர்கள் மற்றும் வங்கி அலுவலர்திரு. A. விஜய் பெஞ்சமின் அவர்கள் இம்முகாமை வழிநடத்திச் சென்றனர். பட்டதாரிஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

சேமிப்பின் நோக்கம்
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு யூகோ வங்கியின் சீனியர் மேலாளர் திரு. C. சிதம்பரம் அவர்கள் சேமிப்பின் நோக்கம், வங்கியில் பணத்தை சேமிப்பதால் கிடைக்கும் பாதுகாப்பு, சேமிப்புக் கணக்கிற்கு வங்கி அளிக்கும் வட்டி வகிதம் ஆகியவற்றை விளக்கினர்.

வங்கி கணக்கு
இம்முகாமில் சுமார் 163மாணவர்களுக்கு புதிய சேமிப்புக் கணக்கு துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் வங்கி கணக்கு புத்தகம் பெற்றவுடன், பணம் கட்டும் ரசீது (PAY IN SLIP )மூலம் பணம் செலுத்தும் முறை, பணம் எடுக்கும் படிவம்(WITH DRAWAL SLIP) மூலம் பணம் எடுக்கும் நடைமுறைகளும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பயிற்சி
மேலும் சீனியர் மேலாளர் திரு. C. சிதம்பரம் அவர்கள், வங்கியின் நடைமுறைகள் குறித்து அவ்வப்போது பயிற்சிகள் அளிப்பதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பட்டதாரி ஆசிரியர் திருமதி.கோமதி அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி சகாய மேரி மற்றும் திருமதி. சுனிதா அவர்கள் செய்திருந்தார்கள்.

வங்கி பணம் எடுத்தல்
பள்ளி மாணவர்களிடையே சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், வங்கி நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் வங்கிக் கணக்குகளை துவக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.
-
பள்ளிகளுக்கு 155 நாட்கள் லீவு! காலண்டர் வெளியீடு! அதிகபட்சம் விடுமுறை எந்த மாதம்? கல்வித்துறை லிஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications