குற்றால அருவிகளில் குளிக்க தடை: நீர்வரத்து அதிகரிப்பால் தென்காசி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை!
தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது அவ்வப்போது மழையுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

குற்றாலம் அருவியில் விழும் நீர் பல்வேறு மூலிகைகள் கலந்து வருவதால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே சீசன் காலங்கள் மட்டுமல்லாது சாதாரண நாட்களில் கூட குற்றாலம் அருவிகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். தற்போது சீசன் நேரம் என்பதால் வெளி மாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் சீராகக் கொட்டியது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு அதிகளவில் வருகை தந்தனர். வரிசையில் காத்திருந்து உற்சாக குளியல் போட்டுச் சென்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் புலி அருவியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பள்ளி மாணவர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications