சிம்ம சொப்பனமாக இருந்த "வீரப்பன்களை" வீழ்த்திய ஜெயலலிதா!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் அவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த 2 வீரப்பன்களை சமாளித்த அணுகுமுறை அசாத்தியமானது.
1982-ம் ஆண்டு அதிமுகவில் அதிகாரப்பூர்வம இணைந்த ஜெயலலிதாவுக்கு அடுத்த ஆண்டே கொள்கை பரப்புச் செயலர் பதவியை வழங்கினார் எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் அதிமுகவே அதகளப்பட்டது.
அதிமுகவில் அப்போது எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக பெருந்தலைகள் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், ஹண்டே, கே.ஏ. கிருஷ்ணசாமி, எஸ்.டி. சோமசுந்தரம், பொன்னையன் என பலரும் இருந்தனர். இவர்கள் யாருக்குமே ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டு வந்தது பிடிக்கவில்லை.
ஜெயலலிதாவை அதிமுகவில் இருந்து வெளியேற்றியே தீர வேண்டும் என முனைப்புகாட்டிய அணிக்கு தலைமை தாங்கியவர் ஆர்.எம். வீரப்பன். இவர்களின் சகுனி ஆட்டங்களில் சில நேரம் ஜெயலலிதா வீழ்ந்தது உண்டு. ஆனால் ஒருபோதும் நிரந்தரமாக ஒதுங்கிப் போக மறுத்தார் ஜெயலலிதா. தம்மை வீழ்த்தியவர்களை வெல்ல வேண்டும் என்ற வேகம், அதற்கான விவேகம்தான் அவரிடம் இருந்தது.

எஸ்.டி.எஸ்.
1984-ம் ஆண்டு ஜெயலலிதாவை ராஜ்யசபா எம்.பி.யாக்கினார் எம்.ஜி.ஆர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியை விட்டே வெளியே போனார் எஸ்.டி. சோமசுந்தரம்... இதே எஸ்.டி. சோமசுந்தரம்தான் பின்னாளில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் தொங்கிக் கொண்டு வந்த 'கதாபாத்திரம்'... இது தனிக்கதை.

அப்பல்லோவில் எம்ஜிஆர்
அப்பல்லோவில் உடல்நலக் குறைவால் எம்ஜிஆர் பாதிக்கப்பட்ட போது அதற்கு ஜெயலலிதாவே காரணம் என எதிர்ப்பு கோஷ்டி பிரசாரம் செய்தது. அப்பல்லோ மருத்துவமனைக்குள் ஜெயலலிதாவை அந்த கோஷ்டி அனுமதிக்கவே இல்லை.

ஆபாச விமர்சனம்
ஜெயலலிதாவுக்கு15,000 எம்.ஜி.ஆர். மன்றங்களின் ஆதரவு இருப்பதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் ஜெயலலிதா குறித்து ஆபாசமாக பேசியதுடன் எம்ஜிஆர் உடல்நலக் குறைவுக்கும் அவரே காரணம் என குற்றம்சாட்ட பெரும் சர்ச்சையாகிப் போனது. வீரப்பனின் சிஷ்யபிள்ளையாக இருந்தவர் அப்போதைய வேளாண் அமைச்சரான காளிமுத்து. இவர்தான் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் மாமனார்.

கங்கணம் கட்டிய காளிமுத்து
ஜெயலலிதாவிடம் இருந்து கொள்கை பரப்புச் செயலர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டபோது அதை மிகக் கடுமையாக வெளிப்படையாக எதிர்த்தவர் காளிமுத்து. அப்போது காளிமுத்து மீது வங்கி மோசடி வழக்கு நடைபெற்றது. அதுதான் 'ராபின் மெயின்' (காளிமுத்துவின் நண்பர்) வழக்கு. இந்த வழக்கை சிபிஐ தொடரக் காரணமே ராஜ்யசபா எம்பி ஜெயலலிதாவே என ஆணித்தரமாக நம்பினார் காளிமுத்து. இதனால் வீரப்பனுடன் கை கோர்த்துக் கொண்டு ஜெயலலிதாவை ஒழிக்காமல் விடப்போவதில்லை என சலங்கை கட்டி ஆடினார்.

சிபிஐ உளவாளி
அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத் தலைவராக முசிறிபுத்தனோ, ஜெயலலிதா சிபிஐ உளவாளி என பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட ஆடித்தான் போனார் எம்ஜிஆர். ஜெயலலிதாவும் வீரப்பன் அணியின் குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க அறிக்கைகள் மூலம் பதிலடி கொடுத்தார். அதிமுகவில் குழப்பம் அதிகரித்த நிலையில் எம்ஜிஆர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். பின்னர் அமைச்சர்களிடம் ராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்துக் கொண்டார்.

தொடர்ந்த யுத்தம்
ஆனாலும் விடுவதாக இல்லை வீரப்பன் கோஷ்டி... ஜெயலலிதாவுக்கு எதிராக 103 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டுள்ளதாக பேட்டி கொடுத்தனர். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோது ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட நினைத்தது வீரப்பன் அணி. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் காலச்சக்கரம் சுழன்றது.

ஜெ. தலைமையில் அதிமுக
அதிமுக இரண்டாக உடைந்து பின்னர் மீண்டும் இணைந்தது. ஜானகி அணியை வழிநடத்தினார் வீரப்பன். 1989 தேர்தலில் ஜானகி அணி படுதோல்வி அடைய அந்த அணியினர் ஜெயலலிதாவின் தலைமை ஏற்றனர். அரசியலில் இருந்து ஓய்வு நிலைக்கு போன நெடுஞ்செழியன் அதிமுகவில் இணைந்தார். பின்னர் அவரை உதிர்ந்த ரோமம் என விமர்சித்தது வேறு கதை.

காளிமுத்து
ஜெயலலிதாவை பரம எதிரி; சிபிஐ உளவாளி; காங்கிரஸின் கையாள் என சகட்டுமேனிக்கு விமர்சித்த காளிமுத்துவும் ஜெயலலிதா தலைமை ஏற்றார். அதேபோல் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரையும் தாய்க் கழகமாக திமுகவுக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்ட தருணம்...

மீண்டும் ஆர்.எம்.வி.
சசிகலாவின் கணவர் எம். நடராஜன், அப்போது அரசியலை விட்டு விலகி இருந்த ஆர்.எம். வீரப்பனை சந்தித்து பேசினார்... 'அனைத்தையுமே' மறந்து போயஸ் தோட்டம் போய் அதிமுகவில் மீண்டும் ஐக்கியமானார் வீரப்பன். ஆனால் வீரப்பனை எப்போதும் சந்தேகக் கண்ணோடுதான் ஜெயலலிதா அணுகினார்.

முடித்து வைத்த ஜெ.
1995-ம் ஆண்டு ரஜினியுடன் நெருக்கமாக இருந்தார் வீரப்பன். அப்போதுதான் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துள்ளது என ரஜினிகாந்த் சாடினார். இதனைத் தொடர்ந்து ஆர்.எம். வீரப்பனை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. பின்னர் அவரையும் அவரது ஆதரவாளர்கள் என ஜெயலலிதா கருதிய முன்னாள் அமைச்சர் மாதவன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரையும் கட்சியில் இருந்து நீக்கினார். அத்துடன் முடிவுக்கு வந்தது வீரப்பனின் அதிமுக அரசியல் சகாப்தம்.

கருணாநிதியின் நண்பர்
அதன் பின்னர் தனிக் கட்சியை வீரப்பன் தொடங்கியபோதும் அரசியலில் சோபிக்கவில்லை.. தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருக்கிறார் ஆர்.எம். வீரப்பன்.
(மற்றொரு வீரப்பன்... நாளை)
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications