சிறப்பு காவல்படையினர் முகாம்களுக்கு திரும்ப டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவு
தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் தயாராக இருக்க போலீஸ் டி.ஜி.பி உத்தரவு
சென்னை: சென்னை: தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படையினர் தங்களின் முகாம்களுக்கு திரும்பி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக டிஜிபி டிகே ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக 19 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

டிஜிபி ராஜேந்திரன் ஆணை
இந்த தகவலானது மாநாகர காவல்துறை ஆணையர், காவல் கண்காணிப்பாளர்கள் வழியாக அறிவுறுத்தப்படுகிறது.
அசாதாரண சம்பவங்கள் எதிர்பார்க்கப்படும் சூழலில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம்.
அதேபோல் மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

முகாம்களுக்கு திரும்புங்கள்
அனைத்து சிறப்பு காவல்படை கம்பெனிகளும் தங்களது முகாம்களுக்கு திரும்பவும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். போராட்டத்தை கட்டுப்படுத்த சென்றவர்கள் முகாம்களுக்கு திரும்புகின்றனர்.

வழக்கமான ஒன்றுதான்
சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் முகாம்களுக்கு திரும்ப டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு காவல்படையினர் முகாம்களுக்கு திரும்புவது வழக்கமான நடவடிக்கையே என்று கூறப்பட்டுள்ளது.

19 மாவட்ட காவல்துறையினர்
காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம்,கடலூர், வேலூர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதி முகாம்களுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தென் மாவட்ட காவல்துறை
இதேபோல மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 27ஆம் தேதி திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைதிநிலையில் தமிழகம்
நீட் உள்ளிட்ட போராட்டங்களுக்காக பாதுகாப்பு பணிக்காக சிறப்புக் காவல்படையினர் நியமிக்கப்பட்டனர். தற்போது தமிழகம் அமைதி நிலைக்கு திரும்பி உள்ளதால் முகாம்களுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications