For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவின் பரிதாப நிலைக்கு ஹெச். ராஜா காரணம்.. கனிமொழி சுளீர்

ஹெச். ராஜா இருக்கும் வரை பாஜக வளர்ச்சியடையாது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    பாதாளத்திற்கு செல்லும் பாஜகவின் செல்வாக்கு....விரைவிலேயே தேர்தல் ?- Oneindia Tamil

    சென்னை: ஹெச். ராஜாவால் தான் மாநில மற்றும் மத்திய பாஜகவுக்கு இழுக்கு என்று குற்றஞ்சாட்டிய திமுக எம்.பி. கனிமொழி, அவர் இருக்கும் வரை பாஜக வளர்ச்சியடையாது என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட போது பொது மேடையில் அமா்ந்திருந்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரா் எழுந்து நிற்காத சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவா் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மாியாதை செலுத்தியது மேலும் சர்ச்சைக்கு வித்திட்டது.

    Because of H Raja BJP is not developing slams kanimozhi

    விஜயேந்திராின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், அவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து விட்டதாகவும் பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளா் ஹெச். ராஜா புதிய வீடியோ பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

    அந்த வீடியோ பதிவில் பொது மேடையில் அமா்ந்திருந்த கருணாநிதி தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து மாியாதை செலுத்தாதது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. ஹெச். ராஜாவின் பதிவிற்கு பல்வேறு பதில் கருத்துகள் தொிவிக்கப்பட்டு வருகின்றன. இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பியும் கருணாநிதியின் மகளான கனிமொழி, ஹெச். ராஜா தான் மத்திய மற்றும் மாநில பாஜகவுக்கு பெரும் இழுக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் பேசிய அவர் ஹெச். ராஜா பாஜகவில் இருக்கும் வரை அந்த கட்சி வளர்ச்சியே அடையாது என்றும், தமிழகத்தில் பாஜகவின் மோசமான நிலைக்கு ஹெச். ராஜா தான் முக்கியமான காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Because of H Raja BJP is not developing slams kanimozhi. And also she added his activities are the reason for the bad image of the Central and state bjp
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X