பீப் பாடல் விவகாரம்: சிம்புவுக்கு ஆதரவாக சென்னையில் ரசிகர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் இன்று அவரது வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத் இருவரையும் வருகின்ற 2 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கோவை போலீசார் 2 வது முறையாக இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

 Beep Song: Simbu Fans Try to Suicide

தற்போது இந்த வழக்கில் நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். நாளை சிம்புவின் மனு மீதான விசாரணை துவங்குகிறது.

இந்நிலையில் இன்று காலை சிம்புவின் ரசிகர்கள் அவரது வீட்டு முன்னர் திரண்டு சிம்புவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.சிம்பு இந்தப் பாடலை வெளியிடவில்லை.

யாரோ அவரது பாடலை திருடி வெளியிட்டு விட்டார்கள். இந்த விவகாரத்தில் சிம்புவைக் குறை கூறுவது நியாயமல்ல என்று கூறினர்.

இதில் திடீரென்று 2 ரசிகர்கள் தங்கள் உடல்களில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த போலீசார் அந்த இருவரின் முயற்சியையும் தடுத்து நிறுத்தினர்.

ஏற்கனவே இணையத்தில் #WeSupportSTR என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி இந்த விவகாரத்தில் சிம்புவிற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தபடியாக தீக்குளிக்க வேறு முயற்சி செய்துள்ளதால் தற்போது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+