பீப் பாடல் சர்ச்சை: சிம்பு ஆஜராக ஜனவரி 29 வரை அவகாசம் அளித்தது ஹைகோர்ட்
சென்னை: சர்ச்சைக்குரிய பீப் பாடல் விவகாரத்தில், சென்னை மற்றும் கோவை காவல் நிலையத்தில் சிம்பு ஆஜராக ஜன.29ம் தேதி வரை அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிம்பு எழுதி பாடிய ஆபாச பாடல் விவகாரம் கடந்த ஒருமாதகாலமாகவே சர்ச்சையை கிளப்பி வருகிறது. கோவையில் தொடங்கிய பெண்கள் அமைப்பினரின் போராட்டம் சென்னையில் பரவியது. குமரி வரை மாநிலம் முழுவதும் மகளிர் அமைப்பினர் சிம்பு, அனிருத்து எதிராக போராடினர். சென்னையில் உள்ள அவரது வீட்டு முன்பு போராட்டங்களும் நடைபெற்றன. பல்வேறு போலீஸ் நிலையங்களில் சிம்பு மீதும், அவர் பாடிய பாடலுக்கு இசை அமைத்ததாக கூறப்படும் அனிருத் மீதும் புகார்கள் கூறப்பட்டது.

கோவை மற்றும் சென்னை போலீசார் சிம்பு, அனிருத் மீது வழக்கு பதிவு செய்தனர். சிம்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருமுறை சம்மன் அனுப்பினர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிம்பு மீது போடப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளுக்கு முன் ஜாமீன் தேவையில்லை என்றும், அவை ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்பதால், சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.
ஜனவரி 11ம்தேதி அன்று விசாரணைக்காக சென்னை போலீசில் சிம்பு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சிம்பு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே கமிஷனர் அலுவலகத்தில் இன்று சிம்பு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான செய்தியாளர்கள் கமிஷனர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே கோவை காவல் நிலையத்திலும், சென்னை காவல் நிலையத்தில் ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க கோரி சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று திடீரென மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், வரும் 29ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications