இச்சைக்கு இணங்காத பிச்சைக்காரியை தூக்கில் தொங்கவிட்ட பிச்சைக்காரர்!
சேலம்: சேலத்தில் பிச்சைக்காரி கொலை வழக்கில் தேடப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் அழகாபுரத்தை அடுத்துள்ள காட்டூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் இருந்த காலியிடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு பிச்சைக்கார பெண் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
தூக்கில் தொங்கிய இடத்தில் மது பாட்டில் கிடந்தது. பக்கத்திலேயே இரண்டு பேர் மது அருந்தியதற்கான காலி கிளாஸ்களும் கிடந்தன. இதனால், அந்த பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.
அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், தூக்கில் தொங்கிய பெண்ணுடன் இன்னொரு பிச்சைக்கார வாலிபரும் அந்தப்பகுதில் சுற்றிக்கொண்டு இருந்ததாக கூறியுள்ளனர்.
இக்கொலை தொடர்பாக அழகாபுரம் போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளியை தேடி வந்தனர். சேலம் பகுதியில் சுற்றித்திரியும் சில பிச்சைக்காரர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலில் பேரில் மேட்டூர் உழவர் சந்தை பகுதியில் பதுங்கியிருந்த பிச்சைக்கார வாலிபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் மணிவாசகம் என்ற மணி என்பது தெரியவந்தது.
பழைய பேப்பர் பொறுக்கி வந்த மணிவாசகமும் அந்த பெண்ணும், ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். நீண்ட நாட்களாக இருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம், குடித்துவிட்டால், அந்த பெண் மணிவாசகத்தை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.
இது மணி வாசகத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று, இருவருக்கும் போதையில் தகராறு ஏற்பட்டதால், அந்தப் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் கொலையை மறைக்கும் நோக்கத்தில் அந்த பெண்ணின் கழுத்தில் சுருக்கு மாட்டி கயிற்றில் கட்டி மரத்தில் தொங்கவிட்டுள்ளார். பிச்சைக்கார பெண்ணை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டாதால், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications