நாராயணசாமி வீட்டு முன்பு "பிச்சை" எடுக்கக் கிளம்பிய 200 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 200 பேர் முதல்வர் நாராயணசாமி வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் குதிக்கக் கிளம்பினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

இதற்காக சுதேசி மில் அருகில் இருந்து இன்று காலை ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு போராட்டக்குழு உறுப்பினர் தெய்வீகன் தலைமை தாங்கினார். ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications