பினாமி எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்ற வேண்டும்... மு.க. ஸ்டாலின் ஆவேசம்
தமிழகத்தில் பினாமி எடப்பாடி பழனிசாமி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டது குறித்து ஜனாபதியை சந்தித்து முறையிட எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார்.
கடந்த 18ம் தேதி சட்டசபையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார். அதனை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க டெல்லி புறப்பட்ட ஸ்டாலின், சென்னை விமான நிலையம் வந்தார்.

ஜனாதிபதியிடம் புகார்
அப்போது, குடியரசுத் தலைவரை சந்திக்கும் போது சட்டசபையில் திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்தும் விளக்க உள்ளேன் என்று ஸ்டாலின் கூறினார். மேலும், அங்கு நடைபெற்ற ஜனநாயக படுகொலை குறித்து எடுத்துரைக்க போவதாகவும், தமிழகத்தில் பினாமி ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

தொடர் போராட்டம்
சட்டசபையில் நடைபெற்ற அக்கிரமங்கள், அநியாயங்கள் குறித்தும், சபாநாயகரின் அதிமுக சார்பு நிலைப்பாடு குறித்தும் ஏற்கனவே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்துள்ளோம். தொடர்ந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

பினாமி ஆட்சி
சசிகலா ஆதரவு பெற்ற பினாமி எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதன் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடையே எதிரொலிக்கும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

நீதி கேட்டு..
இதனைத் தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் திமுக எம்பிகளுடன் ஜனாதிபதியை சந்திக்க மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்டோரும் டெல்லி சென்று ஜனாதிபதி பிராணப் முகர்ஜியை சந்தித்து அதிமுக அரசு குறித்தும், சட்டசபையில் நடைபெற்ற தாக்குதல் குறித்து புகார் தெரிவிக்க உள்ளனர்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications