சென்னை தி.நகரில் 7 அடி ஆழத்துக்கு சாலையில் திடீர் பள்ளம்.. சிக்கிய தண்ணீர் லாரி
சென்னை: தி.நகர் ஜி.என்.ஷெட்டி சாலையில், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு பிறகு ஆங்காங்கு சாலையில் திடீர் பள்ளங்கள் தோன்றி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

மத்திய கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தால் உருவான பீதி மறைவதற்குள், தி.நகர் ஜி.என்.ஷெட்டி சாலையில் இன்று மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. அந்த வழியாக சென்ற தண்ணீர் லாரி அந்த பள்ளத்தில் சிக்கி அசைய முடியாமல் நின்றது.
தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து பரிசீலனை நடத்தினர். மீட்பு லாரி மூலம், தண்ணீர் லாரி அகற்றப்பட்டது.
சுமார் 7 அடி ஆழமும், 5 அடி சுற்றளவும் கொண்ட ராட்சச பள்ளமாக அது காட்சியளிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மண் சரிவால்தான் இதுபோன்ற பள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தனர்.

முதல்கட்டமாக மணலை போட்டு பள்ளத்தை நிரப்பும் பணி நடந்தது. பிறகு, தார்பூசி, சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீர் சாலை பள்ளங்கள் சென்னைவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தரம் குறைந்த சாலைகள் இதற்கு காரணமா, அல்லது நில அமைப்பில் மாறுபாடு ஏற்படுகிறதா என்ற சந்தேகத்தை ஆய்வாளர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications