For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக 22-28; திமுக 7-11; பாஜக அணி 4-6 இடங்கள்! காங்- 0: சி.என்.என்.ஐ.பி.என் எக்ஸிட்போல்

By Mathi
|

சென்னை: தமிழகத்தில் அதிமுக 22 முதல் 28 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் திமுக 7-11; பாஜக அணி 4-6 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது சி.என்.என்.ஐ.பி.என் தொலைக்காட்சியின் எக்ஸிட் போல். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது சி.என்.என்.ஐபிஎன் எகிஸிட் போல்.

9 கட்ட வாக்குப் பதிவுக்குப் பின்னர் சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சி வெளியிட்ட எக்ஸிட் போல் விவரம்:

தமிழகம்

தமிழகம்

அதிமுக 22-28 ; திமுக 7-11; பாஜக அணி 4-6 இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

தெலுங்கானா

தெலுங்கானா

தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 8 முதல் 12 இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 இடங்களையும் தெலுங்குதேசம்-பாஜக கூட்டணி 2 முதல் 4 இடங்களிலும் வெல்லும்.

சீமாந்திரா..;

சீமாந்திரா..;

சீமாந்திராவிலோ தெலுங்குதேசம்-பாஜக கூட்டணிக்கு 11 முதல் 15 இடங்களும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் 11 முதல் 15 இடங்களும் கிடைக்குமாம். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காதாம்.

கேரளா

கேரளா

கேரளாவில் காங்கிரஸ் முன்னணிக்கு ஆறுதல் தரும் வகையில் 11முதல் 14 இடங்களும் இடது முன்னணி 6 முதல் 9 தொகுதிகளும் கிடைக்கும்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு 12 முதல் 16, பாஜகவுக்கு 10 முதல் 14 தொகுதிகள் கிடைக்கும். தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு 1முதல் 3 தொகுதிகள் கிடைக்கும்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

இம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 25 முதல் 31 இடங்களும் இடதுசாரிகளுக்கு 7 முதல் 11 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் 4 இடங்களும் கிடைக்குமாம். மேலும் பாஜக அணிக்கு 1 முதல் 3 தொகுதிகள் கிடைக்கும்.

ஒடிஷா

ஒடிஷா

ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 12 முதல் 16 இடங்களும் பாஜக அணிக்கு முதல் முறையாக 3 முதல் 7 இடங்களும் கிடைக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 3 தொகுதிகளில் வெற்றி கிடைக்குமாம்.

அஸ்ஸாம்-

அஸ்ஸாம்-

கர்நாடகா, கேரளாவைப் போல அஸ்ஸாமிலும் காங்கிரஸ் கட்சி 40% வாக்குகளைப் பெறுமாம். பாஜகவுக்கு 22%, அஸ்ஸாம் கன பரிஷத் 13% வாக்குகள் கிடைக்குமாம்.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட்

இம்மாநிலத்தில் பாஜகவுக்கு 44%; காங்கிரஸ் 21% ; ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவுக்கு 11% வாக்குகள் கிடைக்குமாம்.

டெல்லி

டெல்லி

டெல்லியில் பாஜக கூட்டணிக்கு 5 முதல் 7; ஆம் ஆத்மிக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும். ஆனால் இங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காதாம்.

பஞ்சாப்

பஞ்சாப்

இம்மாநிலத்தில் பாஜக- அகாலிதள் கூட்டணிக்கு 40%, காங்கிரஸுக்கு 16%, ஆம் ஆத்மிக்கு 21% வாக்குகள் கிடைக்கும்

ஹரியானா

ஹரியானா

பாஜகவுக்கு 38%, காங்கிரஸுக்கு 24%, இந்திய தேசிய லோக்தளத்துக்கு 20% வாக்குகள் கிடைக்கும்

உத்தர்காண்ட்

உத்தர்காண்ட்

பாஜகவுக்கு 39%, காங்கிரஸுக்கு 38%, பகுஜன் சமாஜ்கட்சிக்கு 7% வாக்குகள் கிடைக்கும்

ஹிமாச்சல் பிரதேசம்

ஹிமாச்சல் பிரதேசம்

பாஜகவுக்கு 51%, காங்கிரஸ் - 37% வாக்குகள் கிடைக்கும்

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

இம்மாநிலத்தில் பாஜக 45 முதல் 53 தொகுதிகளையும் சமாஜ்வாடி கட்சி 13 முதல் 17 இடங்களையும் பகுஜன் சமாஜ் 10 முதல் 14, காங்கிரஸ் 3 முதல் 5 இடங்களையும் கைப்பற்றும்.

பீகார்

பீகார்

பீகாரில் பாஜக 21 முதல் 27 இடங்களையும் காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் 11 முதல் 15 இடங்களையும் கைப்பற்றும். நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 முதல் 4 இடங்கள் கிடைக்கும்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இம்மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 33 முதல் 37 இடங்களும் காங்கிரஸ் அணிக்கு 11 முதல் 15 இடங்களும் கிடைக்கும்.

English summary
According to CNN - IBN News post poll reports that big lead for Jayalalaithaa in Tamil Nadu, AIADMK to win 22 to 28 seats, DMK 7 to 11 seats, BJP 4 to 6, Cong may draw a blank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X