பொய் சொன்ன ஜூலி முகத்திரையை வீடியோ ஆதாரத்தோடு கிழித்தெறிந்த கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இல்லாததை இருப்பதாக கூறியதை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் அதை ஒப்புக் கொள்ளாத ஜூலிக்கு கமல் பதிலடி கொடுத்ததால் அவர் முகத்தில் ஈயாடவில்லை என்று மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 அல்லது 4 முறை எலிமினேஷன் சென்றுவிட்டு ஸேஃப் ஜோன் சென்றவர் ஓவியா. அதனால் அவரை குறி வைத்து காயத்ரி, நமீதா, இவர்களுக்கு ஒத்து ஊதும் ஜூலி ஆகியோர் டார்ச்சர் கொடுத்து வந்தனர்.

நாமினேஷன் லிஸ்டில் ஓவியா, கணேஷ், நமீதா ஆகியோரின் பெயர்கள் இருந்தன. ஓவியாவுக்கு எதிரான வேலைகளில் ஜூலி, காயத்ரி, நமீதா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இதனால் பரணியை போல் ஓவியாவையும் வெளியேற்றி விடுவார்களோ என்ற படபடப்பு மக்களிடம் காணப்பட்டது.

 கமல் விளக்கம் கேட்டார்

கமல் விளக்கம் கேட்டார்

கிளீனிங் டீமின் தலைவி பதவியை ஓவியாவிடம் இருந்து பறித்து காயத்ரிக்கு கொடுத்து குறித்து பிக்பாஸ் வீட்டின் தலைவர் சக்தியிடம் விளக்கம் கேட்டார் கமல். இதைத் தொடரந்து ஓவியாவை அடிக்க கை ஓங்குவது சரியா என்றும் கமல் கேட்டார். பின்னர் இருவருக்கும் சில அறிவுரைகளை கூறினார்.

 டிரிக்கர் வார்த்தைக்கு எதிர்ப்பு

டிரிக்கர் வார்த்தைக்கு எதிர்ப்பு

ஓவியா டிரிக்கர் செய்வதாக ஒவ்வொரு முறையும் சக்தி கூறியதற்கு கமல் எதிர்பபு தெரிவித்தார். அப்போது டிரிக்கர் ஓவியா எனில் அதன் துப்பாக்கி குழல் யார் என்று கேட்டார். ஓவியா குறித்து அனைத்து போட்டியாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது.

 ஓவியா- ஜூலி பிரச்சினை

ஓவியா- ஜூலி பிரச்சினை

ஜூலிக்கு ஏற்பட்ட வயிற்றுவலியை நடிப்பு என்று கூறினார் காயத்ரி. அது ஜூலிக்கும் தெரியும். அதை ஓவியாவிடம் கூறி அழுதார். அவரும் ஆறுதல் கூறினார். ஆனால் காயத்ரியிடம் பிளேட்டை திருப்பி போடும் டபுள் கேம் செயலில் ஈடுபட்டார் ஜூலி. இதனால் பெண் போட்டியாளர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த பிரச்சினை குறித்தும் கமல் கருத்து கேட்டார். பலர் ஓவியாவுக்கு எதிராகவும், சிலர் ஊகிக்க முடியவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.

 போட்டார் பாருங்க கமல்

போட்டார் பாருங்க கமல்

உடனே ஜூலியும், ஓவியாவும் தனியாக இருந்த அறையில் நடந்த வீடியோ காட்சிகளை போட்டவுடன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார் ஓவியா. ஜூலியின் முகத்திலோ சாயம் வெளுத்துவிடுமே என்ற பயம். இத்தனைக்கு பிறகும் கமலிடம் ஓவியாதான் தன்னை ஏற்றி விட்டார் என்று ஜூலி வாதாடினார்.

 இல்லாத ஒன்றை

இல்லாத ஒன்றை

தவறை ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் ஜூலி வாதாடினார். அப்போது கமல், ஓவியா ஏமாற்றி விட்டதாக கூறிய புட்டேஜ் இருந்தால் உங்கள் வாதத்துக்கு உதவியாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு புட்டேஜை இந்த கேமராக்கள் எதுவும் பதிவு செய்யவில்லை என்றார். மேலும் ஜூலி பிடிவாதமாக வாதிட்டதால் கடுப்படைந்த கமல் இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவது ஹலுசினேஷன் (மனநோய்) என்றார். ஜூலியின் முகத்திரையை கமல் கிழித்தது குறித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 அப்படியும் அடங்காத ஜூலி

அப்படியும் அடங்காத ஜூலி

தன்னை கமல் மென்ட்டல் என்று கூறிவிட்டார் என்றும், தன்னை ஓவியா அசிங்கப்படுத்திவிட்டார் என்றும் மீண்டும் மீண்டும் அழுது ஆர்ப்பாட்டம் செய்த ஜூலி, நான் வீட்டுக்கு போகிறேன், எனக்கு காசு, பணம் எதுவும் வேண்டாம் என்றார். இது ஒரு கேம் ஷோ. இதில் காசு கிடைக்கிறது என்பதை திரும்பி திரும்பி ஜூலி, காயத்ரி போன்றோர் கூறினர். அடுத்தப்படியாக அனைவரும் சேர்ந்து ஜூலியை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய வேண்டும் என்றும், ஜூலி, கேமராவில் இல்லாததை இருக்கும் என்று கமலையே குழப்புவது மோசமாக இல்லையா என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal says that Julie is doing hallusination that is apart from manipulating behaviour.
Please Wait while comments are loading...