ஒரு விவசாயி வீட்டுக்குப் போயிருக்கலாமே ஜூலிக்கா.. சிறுமியின் கேள்வி
பிக் பாஸ்க்கு போய் இப்படி விளம்பரம் தேடவேண்டுமா? அதற்கு பதிலாக ஒரு விவசாயி வீட்டிற்கு போயிருக்கலாமே என்று ஜூலியை கேட்டுள்ளார் ஒரு சிறுமி.
சென்னை: அப்பா ஒரு விவசாயி என்று பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுக விழாவில் பேசிய ஜூலி, பிக்பாஸ் வீட்டிற்குள் அப்பா ஓரு ஆட்டோ டிரைவர் என்று கூறினார். இந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும், விவசாயிகளின் நலனுக்காக ஜூலி 100 நாட்கள் விவசாயி வீட்டில் தங்கியிருந்து அதனை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தலாமே என்று கேட்டுள்ளார் ஒரு சிறுமி.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கூச்சலிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி போராளி பட்டம் பெற்றவர் ஜூலியானா.

விஜய் டிவியில் கமல் நடத்தும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் அவரும் இணைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் கடந்த 5 நாட்களாகவே ஜூலியை சுற்றி கேமரா சுழல்கிறது. சர்ச்சைகளும் ஜூலியை சுற்றியே நடக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் ஜூலியை பற்றியே புறம் பேசுகின்றனர். நான் போராளி என்று சொல்லலையே என்று ஜூலியே தன் வாயால் ஒத்துக்கொண்டார். இவ கத்திட்டு வந்துட்டா... பசங்கதான் அடி வாங்குனாங்க என்று நமீதாவும், ஆர்த்தியும் நேற்று ஜூலியை பற்றி பேசினர்.
இதுவும் தற்போது சர்ச்சையாகி வரும் நிலையில் சிறுமி ஒருவர் ஜூலியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், 100 நாட்கள் ஒரு வீட்டில் நீங்கள் கலந்து கொள்வதற்குப் பதிலாக ஒரு விவசாயி வீட்டில் தங்கியிருந்து அவர்களின் கஷ்டத்தை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டைப் போல தமிழகத்தில் இப்போது இருக்கும் ஒரு பிரச்சனை விவசாயம். ஒரு ஸ்டுடியோவிற்குள் வெட்டியாக 100 நாட்கள் இருப்பதற்குப் பதிலாக, ஒரு ஏழை விவசாயி வீட்டில் தங்கியிருந்து அவர்களின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம். அப்படி செய்திருந்தால், ஜல்லிக்கட்டில் நீங்கள் போராடியதற்கு ஒரு அர்த்தமாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார் அந்த சிறுமி.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications