பீகாரில் நாங்கள் சாதித்ததை தமிழகத்தில் ஸ்டாலின் செய்வார்.. நிதிஷ் குமார்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சக்தி வாய்ந்த முதல்வராக ஸ்டாலின் உருவெடுப்பார் என்று பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் சீரிய திட்டங்களை நிறைவேற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்தி ஸ்டாலின் மக்களுக்கு நல்வாழ்வு அளிப்பார் என்று பீஹார் முதல்வர் நித்திஷ்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது இவ்வாறு அறிவித்தார் நிதீஷ் குமார்.

நிதிஷ் குமார் பேச்சிலிருந்து சில பகுதிகள்:
சக்தி வாய்ந்த திமுக
திமுக மிகவும் சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது. நான் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன், மதுவிலக்கை கொண்டு வருவதிலே பீகார் அரசு பூரண வெற்றி பெற்றுள்ளது. பூரணமாக மதுவிலக்க அமல்படுத்தப்பட்டுள்ளது.
திமுகவின் வாக்குறுதி
நான் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை படித்தேன், அதில் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டிலும் கொண்டு வருவோம் என்று அறிவித்திருந்தார்கள். அதை நான் படித்தேன்.
பீஹார் சாதித்தது
பூரண மதுவிலக்கை பீஹாரில் கொண்டு வந்தததால் பல முன்னேற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏழை மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சாராயத்திற்கு செலவு செய்தனர் அது குறைந்துள்ளது.
அரசின் கடமை என்ன
நுகர்வோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, சாலை விபத்துகள்குறைந்து விட்டது, குற்றங்கள் குறைந்து விட்டது, இதை விட வேறு என்ன வேண்டும். மக்களுக்கு சிறந்த ஆட்சியோடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே அரசின் கடமை தான்.
அனுபவம் மிக்க ஸ்டாலின்
ஸ்டாலின் அவர்களே எல்லாவித அரசியல் அனுபவங்களையும் பெற்றுள்ளார். என்னுடைய மனதிற்கு படுகிறது அவர்தான் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக வருவார் என்ற எண்ணம் எழுகிறது, அது நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன்.
ஸ்டாலின் அளிப்பார்
கருணாநிதியின் சீரிய திட்டங்களை நிறைவேற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்தி ஸ்டாலின் மக்களுக்கு நல்வாழ்வு அளிப்பார் என்று நம்புகிறேன், இவ்வாறு நித்திஷ் குமார் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications