சென்னையில் 'மனிதவெடிகுண்டு' மூலம் மோடியை கொல்ல சதி- இது பிலால் வாக்குமூலம்!
சென்னை: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஆந்திர மாநிலம் புத்தூரில் சிக்கிய பிலால் மாலிக் தெரிவித்துள்ளான்.
ஆந்திர மாநிலம் புத்தூரில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது பிலால் மாலிக்கின் உறவினர் ஜபார் என்பவர் அருகில் உள்ள மற்றொரு தெருவில் வசிப்பது தெரியவந்தது. அவரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது அவர் ஏற்கெனவே தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் உதவியுடன் தமிழக சிபிசிஐடி டிஜிபி நரேந்திரபால் சிங், பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. கண்ணப்பன் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி. அன்பு, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. ரூபேஸ் குமார் மீனா ஆகியோர் அடங்கிய போலீஸ் குழு பிலால் மாலிக் முன்னிலையில் அந்த வீட்டை சோதனையிட்டது.

லேப்டாப் பேக் வடிவ குண்டு
அப்போது அந்த வீட்டிலிருந்து நவீன ரக துப்பாக்கி ஒன்றும் லேப்டாப் பேக் வடிவில் இருந்த ஒரு நவீன ரக வெடிகுண்டு கைப்பற்றியது. இது குறித்து பிலால் மாலிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ரிமோட் மூலம் இயக்கலாம்
அப்போது பேக் வடிவிலான வெடிகுண்டு மனித வெடிகுண்டாக பயன்படுத்தக் கூடியது என்றும் மேலும் ரிமோட் அல்லது செல்போன் மூலம் சில கி.மீ. தொலைவில் இருந்து இயக்கக் கூடியது என்றும் தெரிவித்துள்ளான்.

அதிகாரிகள் அதிர்ச்சி
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இந்த குண்டை எங்கு வைக்க திட்டமிட்டிருந்தனர் என்ற கோணத்தில் விசாரித்தனர்.

மோடிக்குக் குறி வைத்து
அப்போது மாலிக் சென்னை வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டு அதைத் தயாரித்ததாக தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டின் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு
தற்போது அந்த வெடிகுண்டின் தொழில்நுட்பம் குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications