வேலூர் கோர்ட்டில் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் ஆஜர்

பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் புத்தூரில் வைத்து போலீஸாரால் பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பன்னா இஸ்மாயில் குண்டுக் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பிலால் மாலிக்கை இன்று போலீஸார் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது தனது வக்கீலுடன் பேச வேண்டும் என்று பிலால் மாலிக் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.
வருகிற 18ம் தேதி வரை பிலால் மாலிக்கை சிபிசிஐடி போலீஸார் தங்களது காவலில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிலால் மாலிக்கை போலீஸார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
போலீஸ் பக்ருதீனின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரையும் போலீஸார் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். அவரை மேலும் சில நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.
போலீஸ் பக்ருதீனும் ஆஜர்
அதேபோல போலீஸ் பக்ருதீனின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவரையும் போலீஸார் வேலூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜேஎம்-3 நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார் பக்ருதீன். அவரை வக்கீல்கள் அரை மணி நேரம் சந்தித்துப் பேச நீதிபதி அனுமதித்தார். இதையடுத்து பக்ருதீனிடம் அவரது வக்கீல்கள் ஆலோசனை நடத்தினர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications