Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் நம்பி கோவையில் களமிறங்கிய திமுக- பயோடேட்டா

Subscribe to Oneindia Tamil

நா. கார்த்திக்

சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளராக நா. கார்த்திக் (வயது 52) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். கோவை மாநகராட்சி முன்னாள் துணை மேயர். இவரது மனைவி இளஞ்செல்வி தற்போது கோவை மாநகர கவுன்சிலராக இருக்கிறார்.

மீனா லோகு

கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளராக மீனா லோகு (வயது 41) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் செங்குந்த முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். திமுக மகளிர் அணி மாநில துணைச் செயலராக பதவி வகித்து வருகிறார். இவர் தற்போது கோவை மாநகராட்சி கவுன்சிலராக இருக்கிறார்.

பையாக்கவுண்டர் (எ) ஆர். கிருஷ்ணன்

கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளராக பையாக்கவுண்டர் என்ற ஆர். கிருஷ்ணன் (வயது 56) அறிவிக்கப்பட்டுள்ளளார். இவர் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். 2001, 2006 உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு காளப்பட்டி பேரூராட்சி தலைவரானார். தற்போது கோவை தெற்கு மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.

பிரபாகரன்

கிணத்துக்கடவு திமுக வேட்பாளராக பிரபாகரன் (வயது 41) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கோனார் சமூகத்தைச் சேர்ந்தவர். 2005-ம் ஆண்டு முதல் 2011 வரை குறிச்சி நகராட்சித் தலைவராக பதவி வகித்தார். 2014 முதல் குறிச்சி திமுக செயலராக இருந்து வருகிறார்.

சுரேந்திரன்

மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளராக சுரேந்திரன் (வயது 43) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒக்கலிக கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர். வீரபாண்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர்; மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் பதவி வகித்தவர். காரமடை ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார்.

பால்பாண்டி

வால்பாறை (தனி) தொகுதி திமுக வேட்பாளராக பால்பாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது அக்கா கணவர் வி.பி. சிங்காரவேலு கடந்த 1996 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர். கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக தற்போது உள்ளார்.

தமிழ்மணி

பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளராக தமிழ்மணி (வயது 49) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது கோவை தெற்கு மாவட்ட செயலராக உள்ளார். 1998 முதல் 2007 வரை பொள்ளாச்சி தெற்கு திமுக ஒன்றிய செயலராக இருந்தவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+