வாரிசுகள் வலம் வரும் திண்டுக்கல் தேர்தல் களம்- திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
ம.பஷீர்அகமது
திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளராக பஷீர் அகமது (வயது 60) நிறுத்தப்பட்டுள்ளார். திண்டுக்கல் நகர திமுக செயலராக பணியாற்றியுள்ளார். தற்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக உள்ளார். தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் மாநில துணைத் தலைவர், திண்டுக்கல் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வருகிறார். 1996 முதல் 2006 வரை திண்டுக்கல் நகராட்சித் தலைவராக பதவி வகித்தார். 2001 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஐ.பெரியசாமி
ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக ஐ. பெரியசாமி (வயது 64) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சேர்வை சமூகத்தைச் சேர்ந்தவர். ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட திமுக செயலராக பதவி வகித்த இவர், தற்போது மாநில துணைப் பொதுச் செயலராக உள்ளார். வத்தலகுண்டு ஒன்றியத் தலைவர், 1989, 1996, 2006, 2011 என 4 முறை ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக வென்றவர். இரு முறை தமிழக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
எம்.ஏ.ஆண்டி அம்பலம்
நத்தம் தொகுதி திமுக வேட்பாளராக எம்.ஏ.ஆண்டி அம்பலம் (வயது 60) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் அம்பலம் ஜாதியை சேர்ந்தவர். இவரது தந்தை ஆண்டி அம்பலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தொடர்ந்து நத்தம் தொகுதியில் பலமுறை வென்றார். நத்தம் எம்.எல்.ஏ.வாக இருந்த இவரது தந்தை ஆண்டி அம்பலம் கடந்த 1999 ஆம் ஆண்டு காலமானார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட்ட ஆண்டி அம்பலம் தோல்வி அடைந்தார். 2006-ல் திமுக சார்பிலும், 2011 தேர்தலில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். இவர் தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வருகிறார். நத்தம் ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்துள்ளார்.
மு.அன்பழகன்
நிலக்கோட்டை (தனி) தொகுதி திமுக வேட்பாளராக மு. அன்பழகன் (வயது 53) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ஏ.முனியாண்டி, 1967,1971-ல் நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். நிலக்கோட்டை திமுக இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொறுப்புகள் வகித்துள்ளார். நிலக்கோட்டை வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஆக தற்போது உள்ளார்.
இ.பெ.செந்தில்குமார்
பழனி தொகுதி திமுக வேட்பாளராக இ.பெ. செந்தில்குமார் (வயது 38) நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தந்தை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி. திமுக மாநில இளைஞரணி துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக தற்போது உள்ளார். கடந்த 2011 தேர்தலில் பழனி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுவிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அர.சக்கரபாணி
ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளராக அர. சக்கரபாணி (வயது 55) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். 1993 இல் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராகவும், 1997 ஆம் ஆண்டு தலைமை பொதுக்குழு உறுப்பினராகவும், 1999 முதல் 2003 வரை திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராகவும் திமுகவில் பணியாற்றியுள்ளார். 2006 முதல் 2011 வரை அரசு தலைமை கொறடா பதவி வகித்த இவர் 1996 முதல் 2016 வரை தொடர்ந்து 20 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது கட்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராகவும், திமுக சட்டசபை கொறடாவாகவும் உள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications