மீண்டும் களம் காணும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள்....கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக வேட்பாளர்களாக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட கேபி முனுசாமி, சிட்டிங் எம்.,எல்.ஏ. மனோரஞ்சிதம் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் விவரம்:
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ்
(வயது 56) அறிவிக்கப்பட்டுள்ளார். 1977-ம் ஆண்டு பெரியமுத்தூர் அதிமுக கிளை செயலராக பொறுப்பேற்றார். இதன் பின் அதிமுகவில் பல பொறுப்புகள் வகித்த கோவிந்தராஜ் 2001-2006 தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார். 2014-ம் ஆண்டு முதல் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலராக இருந்து வருகிறார்.
வேப்பனஹள்ளி - ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத்
வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.வி.எம். மது என்கிற ஹேம்நாத்தின் வயது 41. சொந்த ஊர் சூளகிரி அருகே உள்ள அத்திமுகம் ஆகும். அவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு சுகானி என்ற மகள் உள்ளார். எல்.கே.ஜி. படித்து வருகிறாள்.
மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.வி.எம். மது என்கிற ஹேம்நாத் கடந்த 2006ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கடந்த 2006, 2011-ம் ஆண்டு என்று 2 முறை சூளகிரி ஒன்றிய குழு தலைவராக பதவியில் இருந்துள்ளார். கட்சியில் சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வருகிறார். இதைத் தவிர கடந்த 2001-ம் ஆண்டில் சூளகிரி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் ஹேம்நாத் இருந்துள்ளார்.
சி.வி. ராஜேந்திரன்
பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளரான சி.வீ.ராஜேந்திரன்
(வயது 61) சிந்தம்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அதிமுகவில் 1980-ம் ஆண்டு முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். 2010-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட செயலராகவும் இருந்தார்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ.
மனோரஞ்சிதம் நாகராஜ் (வயது 41) மீண்டும் போட்டியிடுகிறார். 1998-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பொறுப்பு வகித்து வருகிறார். அதிமுகவில் 100க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மனோரஞ்சிதம் மீண்டும் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
ஓசூர்
ஓசூர் அதிமுக வேட்பாளராக பி.பாலகிருஷ்ணா ரெட்டி
(வயது 47) நிறுத்தப்பட்டுள்ளார். 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் ஓசூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவின் ஓசூர் ஒன்றிய செயலராகவும் இருந்து வருகிறார்.
தளி
தளி தொகுதி அதிமுக வேட்பாளராக சி.நாகேஷ்
(வயது 52) போட்டியிடுகிறார். இவர் தேன்கனிக்கோட்டை பேரூராட்சித் தலைவராக இருந்து வருகிறார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications