தளபதிகளும் வாரிசுகளும் வேட்பாளர்களாக களமிறங்கிய மதுரை- பயோடேட்டா
பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன்
மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (வயது50) நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் சட்டசபை சபாநாயகர், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன். இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அமெரிக்கா நியூயார்க் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
மூர்த்தி
மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக பெ. மூர்த்தி (வயது 56) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். 2006 தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். மதுரை மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மதுரை மேற்கு ஒன்றிய செயலர் பதவி வகித்தவர். தற்போது மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலர். இவரது மனைவி செல்லம்மாள் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
கோ. தளபதி
மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக கோ. தளபதி (வயது 60) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 2006 தேர்தலில் சேடபட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலராக இருந்து வருகிறார்.
பாலச்சந்திரன்
மதுரை தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக எம். பாலச்சந்திரன் (வயது 64) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். 2011 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர்.
மணிமாறன்
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளராக மு. மணிமாறன் (வயது 42) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்த சேடபட்டி முத்தையாவின் மகன். கல்லுப்பட்டி ஒன்றிய செயலராக பதவி வகித்தார். மதுரை தெற்கு மாவட்ட செயலராக இருந்து வருகிறார். 2011 தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
இளமகிழன்
உசிலம்பட்டி தொகுதி திமுக வேட்பாளராக இளமகிழன் (வயது 37) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வழக்கறிஞர்.
பவானி
சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளராக முதலில் ஸ்ரீபிரியா தேன்மொழி அறிவிக்கப்பட்டார். அவர் போட்டியிட விரும்பாத நிலையில் சி.பவானி வேட்பாளரக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னக்கருப்பனின் மனைவி ஆவார்.
அ.பா. ரகுபதி
மேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அ.பா. ரகுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் இருந்து திமுகவுக்கு தாவியவர்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications