சீனியர்களை நாகை மாவட்டத்தில் வேட்பாளராக களமிறக்கிய அதிமுக
சீர்காழி:
சீர்காழி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பி.வி. பாரதி (57) 1975-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வருகிறார். 1996 சட்டசபை தேர்தலில் சீர்காழி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவர். 2011 முதல் சீர்காழி தொகுதி அதிமுக செயலராக இருந்து வருகிறார்.
பூம்புகார்:
பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ். பவுன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்ற சிட்டிங் எம்.எல்.ஏ. பவுன்ராஜ்.
மயிலாடுதுறை:
இந்த தொகுதியில் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலர் ராதாகிருஷ்ணன் (51) வேட்பாளராக போட்டியிடுகிறார். மயிலாடுதுறை ஒன்றியக் குழு உறுப்பினர், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராக இருந்து வருகிறார்.
கீழ்வேளூர்(தனி):
கீழ்வேளூர் தொகுதி அதிமுக வேட்பாளராக மீனா (வயது 35) போட்டியிடுகிறார். கீழையூர் ஒன்றியக் குழு தலைவராக இருக்கிறார். அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி, இணைச் செயலராகவும் பதவி வகித்து வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பி. ஓ.எஸ். மணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 1995- 2001 ஆண்டில் ராஜ்யசபா எம்.பி.யாகவும் 2009-2014-ல் லோக்சபா எம்.பி.யாகவும் பதவி வகித்தவர் ஓ.எஸ். மணியன். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications