மாஜி அமைச்சர்கள், சபாநாயகர், எம்.எல்.ஏ... நெல்லை திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
ஏ.எல்.எஸ். லெட்சுமணன்
திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளாராக ஏ.எல்.எஸ். லெட்சுமணன் (வயது 51) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திருநெல்வேலி தொகுதியில் 2முறை வென்றவரும் நெல்லை மேயருமாக இருந்த ஏ.எல்.சுப்பிரமணியனின் மகன். திமுகவின் நெல்லை மாநகர செயலராக இருந்து வருகிறார்.
ஆவுடையப்பன்
அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளராக ஆவுடையப்பன் (வயது 72) நிறுத்தப்பட்டுள்ளார். திமுகவின் நெல்லை மாவட்ட செயலராக 10 ஆண்டுகாலம் இருந்து வருகிறார். அம்பாசமுத்திரம் தொகுதியில் 1996, 2006 தேர்தல்களில் வென்றார். 2006-2011ஆம் ஆண்டு காலத்தில் சட்டசபை சபாநாயகராகவும் பணியாற்றினார்.
மைதீன்கான்
பாளையங்கோட்டை திமுக வேட்பாளராக மைதீன்கான் (வயது 70) நிறுத்தப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை தொகுதியில் 2001, 2006, 2011 தேர்தல்களில் வென்றவர். 2006-ல் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
பூங்கோதை ஆலடி அருணா
ஆலங்குளம் திமுக வேட்பாளராக டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா (வயது 52) நிறுத்தப்பட்டுள்ளார். 2006- தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் வென்றவர். இவர் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள். திமுகவின் மாநில மருத்துவர் அணித் தலைவராக இருக்கிறார்.
அப்பாவு
ராதாபுரம் தொகுதியில் மு. அப்பாவு (வயது63) திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 1996, 2001 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். 2005-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 2006 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வென்றார்.
அன்புமணி கணேசன்
சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் அன்புமணி கணேசன் (வயது 45) திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒன்றிய குழுத் தலைவராகவும் இருந்தார். ஆதி திராவிடர் நலக் குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா










Click it and Unblock the Notifications