இளையவர்களும் மூத்தவர்களுமாய்.... திருச்சி திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
கே.என்.நேரு
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக
கே.என். நேரு (வயது 63) நிறுத்தப்பட்டுள்ளார். 1989, 1996-ல் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2006-ல் திருச்சி-2வது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ல் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். திமுக ஆட்சியில் உணவு, கூட்டுறவுத்துறை, மின்துறை அமைச்சராக பதவ் வகித்தவர். நீண்டகாலம் திருச்சி திமுக மாவட்ட செயலராக இருந்தவர்.
சவுந்தரபாண்டியன்
லால்குடி தொகுதி திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ.
சவுந்தரபாண்டியன் (வயது 52) அறிவிக்கப்பட்டுள்ளார். 2006-ம் ஆண்டு தேர்தலிலும் லால்குடி தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானவர்.
பழனியாண்டி
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் எம்.
பழனியாண்டி (வயது 48). இவர் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். மணிகண்டம் ஒன்றிய திமுக செயலராக 3 முறை பதவி வகித்தவர்.
கணேசன்
மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளராக
கணேசன் (வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார். முசிறி கிழக்கு ஒன்றிய திமுக செயலராக இருக்கிறார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளராக
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (வயது 39) நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தாத்தா அன்பில் தர்மலிங்கம் முன்னாள் அமைச்சர்; இவரது தந்தை பொய்யாமொழி, சித்தப்பா பெரியசாமி ஆகியோரும் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்.
ஸ்டாலின்குமார்
துறையூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக
ஸ்டாலின்குமார் (வயது 32) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் பொறியியல் பட்டதாரி. இவரது தந்தை துறையூர் 17-வது வார்டு செயலர்; தாய் துறையூர் நகர்மன்ற தலைவராக இருந்தவர்.
முகமது நிஜாம்
மணப்பாறை தொகுதி திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக முகமது நிஜாம் (வயது 45) அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர். எம்.ஏ.எம். கல்விக் குழுமத்தின் தலைவராவார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications